புதன், 26 ஜனவரி, 2011

இஸ்ரேலில் குண்டு அழகு ராணிப் போட்டி!

2011 ஆம் ஆண்டுக்கான குண்டு அழகு ராணியை தெரிவு செய்கின்றமைக்கான போட்டி இஸ்ரேலில் சில நாட்களுக்கு முன் இடம்பெற்றது.

இந்நாட்டில் குண்டு அழகு ராணிப் போட்டி கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தவறாது இடம்பெறுகின்றமை வழக்கம்.

இது ஒரு கலாசார விழாவாக கொண்டாடப்படுகின்றது. குறைந்தது 80 கிலோ கிராம் எடை உடைய பெண்கள்தான் இதில் போட்டியிட முடியும்.

120 கிலோ கிராம் இற்கும் அதிகமான எடை உடைய குண்டுப் பெண்கள் பலர் இம்முறை இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றினர். இவ்வாண்டுக்கான குண்டு அழகு ராணி என்கிற மகுடத்தை ரசியாவில் பிறந்தவரான ரன்யா பைபன் உரித்தாக்கிக் கொண்டார்.

குண்டுப் பெண்கள் சொந்த உடலை விருப்பத்துடன் பராமரிக்க வேண்டும், தாழ்வுச் சிக்கல் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்கிற எண்ணக் கருக்களை அடிப்படையாக கொண்டே இப்போட்டி நடத்தப்படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல