புதன், 26 ஜனவரி, 2011

இந்திய மாடல் அழகியை காதலிக்கும் ஆலிவுட் நடிகர்

பிரபல ஆலிவுட் நகைச்சுவை திரைப்படமான `தி மாஸ்க்' படத்தில் நடித்தவர், ஜிம் கேரி. புகழ் பெற்ற காமெடி ஹீரோவான இவர், ஜெனி மெக்கர்தி என்ற அழகியுடன் 5 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், ஆஞ்சல் ஜோசப் என்ற இளம் மாடல் அழகியை காதலிக்க தொடங்கியுள்ளார். விழா, விருந்து உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.

இந்தியாவில் டெல்லியை பூர்வீகமாக கொண்ட ஆஞ்சல் ஜோசப், தனது 6-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறினார். 2007-ம் ஆண்டு அமெரிக்காவின் தலை சிறந்த மாடல் அழகியாக தேர்வானார். பிரபல மாடல் அழகியான ஆஞ்சலாவுக்கு ஜிம் கேரியின் வயதில் பாதி தான் ஆகிறது. அதாவது, ஜிம் கேரிக்கு 49 வயது. ஆஞ்சலாவுக்கு 24 வயது. காதலுக்கு வயது தடையில்லை போலும்!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல