இந்தியாவில் கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடிகளை, `விக்' தயாரிப்பு மற்றும் மருந்து பொருட்களுக்காக விற்பனை செய்வது வழக்கம். இந்தியாவில் போலவே, மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலிலும் இந்திய பக்தர்கள் முடி காணிக்கை செய்கின்றனர். ஆண்டு தோறும் தைப்பூச திருநாளில் கிலோ கணக்கில் முடி குவிகிறது. இது வரை, இந்த முடியை கழிவு பொருளாக ஆறுகளில் கொட்டி வந்தனர்.
தற்போது, தரகர்கள் மூலமாக வெளிநாட்டு `விக்' நிறுவனங்களுக்கு முடியை விற்பனை செய்ய முடி திருத்துபவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியர்களின் தலைமுடியை ஒரு கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வெளிநாட்டு `விக்' நிறுவனங்கள் வாங்குகின்றன. எனவே, இத்தகைய முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். பெண்களின் தலைமுடிக்கு கடும் கிராக்கி உள்ளது. ஆனால், மலேசியாவில் உள்ள பெண்கள் மொட்டை அடிப்பதை விரும்புவதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக