நியுசிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார். அங்கிருந்து பிஜி தீவுக்கு தப்பியோடிய அந்த பெண்ணின் கணவரை பிடிக்க சர்வதேச போலீசார் உதவியை நியுசிலாந்து கேட்டுள்ளது.
பிஜி தீவுக்கு ஓட்டம்
நியுசிலாந்தில் உள்ள ஹன்ட்லி என்ற இடத்தின் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் இளம் பெண்ணின் உடல் நேற்று கிடந்தது. எரிந்த நிலையில் கிடந்த அந்த உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண்ணின் பெயர் ரஞ்சிதா சர்மா (வயது 28) என்பதும் இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ரஞ்சிதா, அவருடைய கணவர் மற்றும் 4 வயது மகன் ஆகியோர் நியுசிலாந்து சென்றுள்ளனர். எனவே, ரஞ்சிதாவின் கணவர் தான் அவரை எரித்துக் கொன்றிருக்க கூடும் என போலீசார் கருதுகின்றனர். மேலும், பிஜிதீவுக்கு அவர் தப்பிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய கணவரின் பெயரை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இண்டர் போல் உதவி
இது குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வு துறை உயர் அதிகாரி நைஜல் கேல், ``அவருடைய கணவரை கண்டு பிடித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இண்டர் போல் (சர்வதேச போலீஸ்) உதவியை நாடி இருக்கிறோம். மேலும், பல்வேறு வெளிநாடுகளின் போலீஸ் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டிருக்கிறோம்'' என்றார்.
இதற்கிடையே, ஆக்லாந்து விமான நிலையத்தில் ரஞ்சிதா தம்பதியினரின் கார் அனாதையாக நின்றது. தெற்கு ஆக்லாந்தில் பதிவு செய்யப்பட்ட அந்த கார் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். ஹண்ட்லி பகுதியில் ரஞ்சிதா தம்பதியினர் சுற்றியதால் ஹண்ட்லி மற்றும் ரோடோவரா பகுதிகளை சேர்ந்த சிலருக்கு சமன் அனுப்பி விசாரிக்கவும் சில பகுதிகளில் சோதனை போடவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், வரதட்சணை காரணமாக கொலை நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக