என்னை சுவீடனுக்கு நாடு கடத்தும் வழக்கு, என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்பதை நிரூபிக்கும் என்று “விக்கிலீக்ஸ்” நிறுவுனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
லண்டனின் பெல் மார்ஷ் மாஜிஸ்திரேட் நீதிமன்றில் அசாஞ்ச் மீதான சுவீடனுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக நடந்தது. முதல் நாள் விசாரணையில் அசாஞ்சின் சட்டத்தரணிகள் “அவர் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டால் சுவீடன் அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது.
அமெரிக்கா, குவான்டனமோ சிறைக்கு அனுப்பும் அல்லது மரண தண்டனை அளிக்கும் என்று வாதிட்டனர். அவர்களின் வாதத்தை மறுத்த சுவீடன் தரப்பு வக்கீல் “அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தமாட்டோம். அப்படியே ஒரு முயற்சி நடந்தாலும் அதில் பிரிட்டன் தலையிட்டு தடுக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
இதற்கிடையில் முதல் நாள் விசாரணை முடிந்தவுடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அசாஞ்ச் “கடந்த ஐந்து மாதங்களாக என் வாழ்க்கை ஒரு கறுப்புப் பெட்டிக்குள் திணிக்கப்பட்டது. அப்பெட்டியின் மீது “கற்பழிப்பு” என்ற குற்றச்சாட்டு ஒட்டப் பட்டிருந்தது. இப்போது அப்பெ ட்டி நீதிமன்றால் திறக்கப்பட் டுள்ளது. இனிவரும் நாட்களில் என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பது நிரூபிக்கப்படும்” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக