சனி, 12 பிப்ரவரி, 2011

புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

ஆப்பிள் பல மருத்துவக் குணங்கள் உள்ள பழ வகையாகும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெற முடியும் தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறவர்களுக்கு 50 சதவீத பாதுகாப்புக் கிடைக்கிறது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்து விடுகிறார் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் போலந்து விஞ்ஞானிகள் ஆய்வுக்குட்படுத்தினர்.

அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது. வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய் பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் ஆய்வுக்குட்படுத்தினர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 95 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர்.

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.

இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது.

ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளது. எனவே ஆப்பிள் பழ தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் புற்றுநோய் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல