சனி, 12 பிப்ரவரி, 2011

பல உயிர்களை பலிகொண்ட ‘வைரம்’

வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியா பல்கலைக்கழகத்தில் ‘ஹோப்’ எனப்படும் வைரம் உள்ளது. இந்த வைரத்தை திருடியவர்கள், வைத்திருந்தவர்கள், அபகரித்தவர்கள் என அனைவரும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.

சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கோவிலில் இருந்த அந்த ‘ஹோப்’ வைரத்தை கோவில் பூசாரியே ஒருநாள் திருடி மாட்டிக் கொண்டார். இதனால் அரசன் பூசாரிக்கு மரண தண்டனை வழங்கினார். பின்னர் அந்த வைரம், ஒரு பிரெஞ்சு கடத்தல் காரனின் கையில் சிக்கியது.

1642 ஆம் ஆண்டில் அந்த கடத்தல் காரன், ஐரோப்பிய நாடுகளில் வைரத்தை விற்று, பெரிய பணக்காரனாக வலம் வந்தான். ஆனால் சில ஆண்டுகளில் கடத்தல்காரனின் மகன், சூதாட்டத்தில் அந்த சொத்தை எல்லாம் தொலைத்தான்! இதனால் மனம் உடைந்த கடத்தல்காரன், மீண்டும் இந்தியாவுக்கு வந்தான். அங்கு ஓரிடத்தில் கொள்ளை அடிக்கும்போது ஒரு வெறிநாயால் கடிபட்டு இறந்தான்.

அதன் பின்னர் அந்த வைரம் 12 ஆம் லூயிடம் வந்து சேர்ந்தது. சில ஆண்டுகளிலேயே போரில் பல தோல்விகளை கண்டு

மனமுடைந்து இறந்தார் 12 ஆம் லூயி. அதன் பின்னர் அந்த வைரத்தை அணிந்து கொண்ட 16 ஆம் லூயியும், மனைவி மேரி அண்டாய்னட்டும், அந்நாட்டு

புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அந்த வைரம் பிரென்சு நாட்டைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரியிடம் வந்து சேர்ந்தது. அவரும் சில ஆண்டுகளில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி பல சோகங்களை உருவாக்கிய வைரம் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஹோப் என்பவரிடம் வந்து சேர்ந்தது. இவர் அந்த வைரத்தை வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு மலிவாக வாங்கினார். சில ஆண்டுகளில் அவருடைய செல்வம் முழுவதும் கரைந்து போனது.

908 ஆம் ஆண்டு துருக்கி சுல்தான் அந்த வைரத்தை 4 லட்சம் பவுனுக்கு வாங்கினார். அடுத்த வருடத்திலேயே பதவியை அவர் இழந்தார். மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தது அந்த வைரம். 1911 ஆம் ஆண்டு மெக்லின் என்பவர் வாங்கினார்.

சில மாதங்களில் அவருடைய மகன் கார் விபத்தில் இறந்தான். மகள் போதையின் தாக்கத்தால் இறந்தாள். இதனால் அவர் மனநோய் தாக்கி மரணமடைந்தார்.

இறுதியாக அந்த அந்த வைரம் அமெரிக்க நகை வியாபாரியான ஹாரி வில்சனிடம் வந்து சேர்ந்தது. அவர் மட்டுமே அந்த வைரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் வாழ்ந்தார்.

மெக்லினிடம் இருந்து வாங்கிய ஹாரி வில்சன் கொஞ்ச நாட்களிலேயே அந்த வைரத்தை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியா பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல