சனி, 12 பிப்ரவரி, 2011

ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலிருந்த பெண்கள்!


ஆண்ட்ரு ஜாக்சன்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பதாகக் கூறுவர்.

அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரு ஜாக்சனுக்கு அவருடைய மனைவி செய்த உதவி மகத்தானது. திருமணத்துக்கு முன் அவர் எழுதப் படிக்கத் தெரியாதவராய் இருந்தார். அவருக்கு கல்வி போதித்து அவரை அமெரிக்க ஜனாதிபதியாக வரச் செய்ததே அவரது மனைவிதான்.

சவாலான பிரச்சினைகள் ஏற்படும் போது சர்ச்சில் தன் மனைவியிடம் சென்று அறிவுரை கேட்டு புதுத் தெம்புடன் தன் பணியைத் தொடருவாராம்.
ஹென்றி ஃபோர்டு
“மோட்டார் மன்னர்” ஹென்றி ஃபோர்டு தன்னுடைய ஆராய்ச்சியில் தோல்விக்கு மேல் தோல்வி கண்டு வந்த போதும் அண்டைய அயலார் எல்லாம் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடினர். அவரது மனைவி ‘மனம் சோர்வுறாதீர்கள்! நீங்கள் நிச்சயம் வெற்றிபெறுவீர்கள். அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது என்று உற்சாகமூட்டி வந்தார்.

மனைவி ஊக்கமூட்டியதால் மனந்தளராது ஆராய்சிகளை தொடர்ந்தார் ஹென்றி. அதன் பலனாக மோட்டார் காரை ஹென்றி ஃபோர்ட் கண்டுபிடித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல