சனி, 12 பிப்ரவரி, 2011

விண்டோஸின் வளர்ச்சி

“ஒபரேடிங் சிஸ்டம்” பணி செயல் முறைமை என்பது கணனி செயல்படுவதற்குரிய அடிப்படை தொழிற்பாடுகளை மேற்கொள்ளும் ஒன்றாகும்.

கணனியைத் தொடங்கல், பணி நிறுத்தம் செய்தல், வன்பொருள்களையும், மென்பொருள்களையும் இயக்குதல்.

பயனருக்கும் வன்பொருளுக்கும் இடையில் இடைமுகமாக தொழிற்படுதல், முகாமித்தலை மேற்கொள்ளல் அதாவது ஆவணங்களை பராமரித்தல், தரவு, தகவல்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் ஒவ்வொரு புரோகிரம்களுக்கும் நேரம், இடம் என்பவற்றை ஏற்படுத்தல் வட்டுகளை முகாமைத்துவம் செய்தல், வட்டு, நினைவகம் முறைவழியாக்கல் போன்றவற்றை முகாமைத்துவம் செய்தல் போன்றன இதனுடைய செயற்பாடுகளாக அமைகின்றன. இது இல்லாவிடின் கணனி இயங்காது.

கணனியை செயற்படுத்த தொடங்கியதும் ஹாட்டிஸ்கிலுள்ள ஒபரேடிங் சிஸ்டத்தின் ஒரு பகுதி பயோஸ் ஆனது. ரொம்முக்குள் நிறுவப்பட்டு கணனியை நிறுத்தும் வரை அதில் செயல்படும். கணனி பணி செயல் முறையை பொறுத்த அளவில் அது இரு வகைப்படும். 1. கட்டளை தொடர் இடைமுகம் (CLI) 2. வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) ஆகும்.

ஒபரேடிங் சிஸ்டத்தை பல நிறுவனங்கள் மென்பொருட்களாக வெளியிட்ட போதிலும் மைக்ரோசொப்ட் நிறுவனமே மக்கள் மத்தியில் அதி பிரபல்யமாக காணப்படுகின்றது. வெள்ளி விழா கண்டுள்ள இந்நிறுவனத்தின் விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டமானது பல பதிப்புக்களை கொண்டுள்ளன.

1985 நவம்பர் மாதம் 20ம் திகதி விண்டோஸின் முதல் வேஷன் வெளிவந்தது. அப்போது தொழில்நுட்ப பிரிவினரை தவிர ஏனையோருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது உலகமெங்கும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.


1985 - விண்டோஸ் 1.0

விண்டோஸ் 1981ம் ஆண்டு இன்டர்நெட் மெனேஜர் என்ற திட்டத்தினை ஆரம்பித்து பல தடைகளுக்கு பின்னர் 1985ம் ஆண்டு விண்டோஸ் 1.0 ஆக வெளியிடப்பட்டது. இது ளிலிஷி மீது இயங்குமாறு வடிவமைக்கப்பட்டது. நோட்பேட் டெக்ஸ் எடிடர், கலண்டர், லோன்ங் லய்ன்ட் கிரபிக்ஸ் பேய்ன்டிங் புரோகிரேம் போன்ற அப்ளிகேஷன்கள் இதனுடன் வந்தன. ணிஷி – ளிலிஷி வேஷன் 2.0.kb மெமோரி கிரபிக்ஸ் அடப்டர் இதற்கு தேவைப்பட்டது.


1987 - விண்டோஸ் 2.0

விண்டோஸ் 2.0 ஆனது விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு இரு வருடங்களுக்கு பின்னர் வெளியானது. மைக்ரோசொப்ட் எக்ஸல், வேர்ட் போன்ற அப்லிகேஷன்கள். இதன் மீது இயங்க உருவாக்கப்பட்டன. எப்பில் 1988ல் விண்டோஸ் 2.0 ஆனது. மெக்கின்டோஸ் ஒபரேடிங் முறைமையானது பிரதிபோல் இருக்கிறது என வழக்கு தொடரப்பட்ட. MS – DOS வேஷன் 3.0, kb மெமோரி இதற்கு தேவைப்பட்டது.


1990 - விண்டோஸ் 3.0

விண்டோஸ் 3.0 பதிப்பு 1990லும் இதன் அடுத்த பதிப்பான விண்டோஸ் 3.1 1992லும் வெளியானது. இதுதான் விண்டோஸ் எதிர்காலத்தில் உலகின் முதல் இடத்தை பிடிக்கக்கூடிய டெஸ்க்டொப் ஒபரேடிங் சிஸ்டமாக வரக்கூடும் என கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.


1993 - விண்டோஸ் னிஹி 3.0

விண்டோஸ் னிஹி 3.0 ஆனது ஜுலை மாதம் 1993ல் வெளியானது. என்.ரி. ஒபரேடிங் சிஸ்டத்தின் முதல் வெளியீடான இது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாவிக்கக்கூடியவாறு பாதுகாப்பான உறுதியான ஒன்றாக வந்தது. 1994ல்


விண்டோஸ் என்.ரி. 3.5ம், 1995ல் விண்டோஸ் என்.ரி. 3.51ம், 1996ல் விண்டோஸ் என்.ரி. 4.0 என பல வெளியீடுகள் இதில் வந்தன.


1995 - விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது. இதுதான் முதல் ஒபரேடிங் சிஸ்டமாக அமைந்தது. DOS மீது இன்ஸ்டோல் பண்ணாமல் விண்டோஸ் மட்டும் இன்ஸ்டோல் பண்ணினால் போதும் என இது விண்டோஸ் டொஸ்ஸை உள்ளடக்கி வந்தது. இது வெளியான போது மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான பிரச்சாரம் இன்றைய ஒபரேடிங் சிஸ்டங்களில் இருக்கும் பல இன்டர்பேஸ் (டாஸ்க் பார், ஸ்டார் மெனு) ப்ளக் என்ட் ப்லே எனும் பீச்சரும் அறிமுகமானது.


1998 - விணிடோஸ் 98

விண்டோஸ் 98ஆனது ஜூனில் வெளியிடப்பட்டது. முதன் முறையாக ஒபரேடிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரும் சேர்ந்து வந்தது. இதில் இன்டர்நெட் பாவனைக்கு தேவையான வசதிகள் பல மேம்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் விண்டோஸ் 95லிருந்து பாரிய மாற்றங்களுடன் வராத பட்சத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வெளியானது.


2000 - விண்டோஸ் 2000

விண்டோஸ் 2000 பெப்ரவரி மாதம் 2000ல் வெளியானது. இது வீட்டு பாவனைக்கு அல்லாமல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. விண்டோஸ் என்.ரி. 4.0 வின் தொடர்ச்சியாக வர்த்தக தேவைகளை மையப்படுத்தி வெளிவந்த ஒன்று. கோப்புக்களை பாதுகாக்க விண்டோஸ் பைல் புரடக்ஷன், என்க்ரைப்டிங் பைல் சிஸ்டமும் நெட்வேர்க் டொமைன் சேவைகளுக்கு உதவிபுரிய எக்டிவ் டிரெக்டரி எனும் தொழில்நுட்பமும் இதில் அறிமுகமானது.


2000 - விண்டோஸ் Me

விண்டோஸ் மிலேனியம் எடிஷன் 2000 செப்டெம்பர் வெளியிடப்பட்டது. வன்பொருட்களுக்கான ஒத்திசையின்மை மற்றும் இயங்கு தளம் நேர்த்தியாக இயங்காமை, இயங்கு தளம் உரைதல், ஆரம்பிக்கும் போதும், நிறுத்தும் போதும் உள்ள பிரச்சினைகள் காரணமாக முரண்பாடுகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டு XP வெளியிடப்பட்டதன் காரணமாகவும் ஒரு வருடத்துக்குள் முடிவுக்கு வந்தது. இதுதான் டொஸ் கட்டமைப்பை உள்ளடக்கி வந்த விண்டோஸின் இறுதி ஒப்பரேடிங் சிஸ்டமாக இருந்தது. விண்டோஸ் மூவி மேக்கர் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது.


2001 - விண்டோஸ் XP

விண்டோஸ் எக்ஸ்.பி 2001 ஆகஸ்டில் வெளிவந்தது. விண்டோஸ் எக்ஸ்.பி ஹோம் எடிஷன், விண்டோஸ் எக்ஸ்.பி புரபொஸனல் என்பன இதில் பிரபல வகைகளாகும். வண்மையான பிரகாசமான இன்டர்போல், ட்ரொப் ஷெடோஸ் சேர்க்கப்பட்ட ஜகன் லேபல்ஸ், பேடிங் என்ட் ஸ்லைடிங் மெனூஸ் பின்னணி தீம்கள் சேர்க்கப்பட்டன. தொலைவிலிருந்து கணனியை கணனி வலையமைப்பின் ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய ரிமோரட் டெஸ்க்டொப் என்பது இதில் சேர்க்கப்பட்டது.


2006 - விண்டோஸ் Vista

விண்டோஸ் விஸ்டா 2006 இறுதியில் வெளியானது. இதுதான் அதிகம் விமர்ச்சிக்கப்பட்ட வெறுக்கப்பட்ட விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டமாக இருந்தது. இது பழைய ஹாட்வெயார்களில் இயங்க மறுத்தமை பெரும் சிக்கலாக இருந்தது. இது ஆறு பதிப்புக்களில் வந்தாலும் விண்டோஸ் விஸ்டா ஹோம் பிரிமியம் பிரபலம் இதன் இன்டர்பேஸ் எக்ஸ்.பியின் இன்டர்பேஸைவிட மாறுபட்டது. விண்டோஸ் எரோ எனும் ஒரு புதிய பீச்சர் இதற்காக இதில் அறிமுகமானது. இதற்கு1-GHz புரஸ்ஸர், 1-GB சிஸ்டம் மெமொரி, 1ஜிபி. எச். டி. ஸ்பேஸ், கிரபிக் கார்ட் தேவை.


2009 - விண்டோஸ் 7

மைக்ரோசொப்டின் தற்போதைய டெஸ்க்டொப் ஒபரேடிங் சிஸ்டமான இது 2009 ஒக்டோபரில் வெளியானது. விண்டோஸ் 7 ஹோம் பிரமியம், விண்டோஸ் 7 புர பொஸனல், விண்டோஸ் 7 அல்டிமேட் என பல பதிப்புக்களில் இது கிடைக்கின்றது. இது விஸ்டாவில் இருந்த பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு 1 ஜிஎச் புரொஸ்ஸஸ்ஸர் (32 அல்லது 64 பிட்), 1 ஜி.பி சிஸ்டம் மெமொரி, 16 ஜி.பி ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் (20 ஜி.பி 64 பிட் வேஷன்), கிரபிக் கார்ட் ஒன்று விண்டோஸ் எரோக்கு ஒத்துழைக்க தேவை.

உலகில் மென்பொருள்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இருந்த போதிலும் பாவனையாளர்கள் மத்தியில் அதிக இடம் பிடித்தது மைக்ரோசொப்ட் விண்டோஸ் பதிப்புக்கள் என்றால் அது மிகையாகாது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல