வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஒளிந்து விளையாடிய 4 வயது சிறுமி தாயாரின் காரில் மோதுண்டு பரிதாப மரணம் (படங்கள் இணைப்பு)

ஒளிந்து விளையாடும் முகமாக தனது 4 வயது மகள் காரின் பின்னால் மறைந்து நிற்பதை அறியாத தாய், காரைப் பின்பக்கமாக செலுத்தி திருப்ப முயற்சித்ததால் காரில் மோதுண்டு அந்த சின்னஞ்சிறு மகள் பரிதாப மரணத்தை தழுவிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.



ஒலிவியா என்ற சிறுமியே இவ்வாறு தாயாரான கெல்லி குயிக்லி ஹிக்ஸின் (35 வயது) காரில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

நகர சபை உத்தியோகஸ்தராக கடமையாற்றும் குயிக்லி ஹிக்ஸின் கணவர் கிரஹம் ஹிக்ஸ் (34 வயது) வங்கி அதிகாரியாவார். சம்பவதினம் பணிக்கு செல்லும் முகமாக குயிக்லி ஹிக்ஸ், தனது மகள் ஒலிவியாவை காரில் ஏற்றிச் சென்று பெட்போர்ட் ஷியரிலுள்ள தனது தாயாரின் வீட்டில் விட்டுள்ளார். அதன்பின் குயிக்லி ஹக்ஸும் அவரது தாயாரும் உரையாடலில் ஈடு பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒலிவியா தாயாருடன் விளையாடும் முகமாக தாயின் காரின் பின்னால் மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது.

வேலைக்கு செல்லும் பரபரப்பில் இருந்த குயிக்லி ஹிக்ஸ் காரை பின்பக்கமாக 10 அடி தூரம் வரை செலுத்தி வளைத்து திருப்பியுள்ளார்.

இதன்போது காரின் கீழ் சிக்கி ஒலிவியா படுகாயமடைந்திருப்பதை கண்டு பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒலிவியா 5 நாட்கள் கழித்து மரணமடைந்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல