பிரேசிலில் கொலை செய்யப்பட்டவர்களின் பின் பகுதிகள் மற்றும் தொடைகளிலிருந்து பெறப்பட்ட நரமாமிசம் மூலம் தயாரித்து விற்கப்பட்ட இறைச்சி தின்பண்டத்தை நூற்றுக்கணக்கான மக்கள் அதன் விபரீதத்தை உணராது உட்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இஸபெல் டா சில்வெயிரா (51 வயது) என்ற பெண் நடை பாதை வியாபாரி, தனது கணவர் ஜோர்ஜுடன் (50 வயது) இணைந்து படுகொலை செய்தவர்களின் பின் பகுதி மற்றும் தொடைப் பகுதி என்பனவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட “எம்பன டாஸ்' என அழைக்கப்படும் இறைச்சி உணவை சந்தேகம் ஏற்படாத வகையில் விற்றதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு புருனா கிறிஸ்னாடா சில் வா (25 வயது) என்ற யுவதி உதவி வந் துள்ளார். அவர் ஜோர்ஜுடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அலெக்ஸாண்ட்ரா பல்கவோ (20 வயது) மற்றும் 31 வயது பெண்ணொருவர் ஆகி யோரது எச்சங்கள் வடகிழக்கு பிரேசிலின் கரன் ஹன்ஸ் எனும் இடத்திலுள்ள இஸ்பெல்லின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியிலும் வீட்டின் பின் பக்கத்தில் புதைக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டன.
மேற்படி இரு பெண்களும் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின் னர் அவர்களது தசைப் பகுதிகள் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத் துடன் அவர்களது குருதியும் வடித்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் இஸபெலும் ஜோர்ஜும் புருனாவும் மேற்படி நரமாமிசத்தை உண்டுள்ளனர். இவ்வாறு நரமாமி சத்தை உட்கொள்வது தமது ஆன்மாவை பரிசுத்தப்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய மக்களையும் புனிதப்படுத்தும் நோக்கில் நரமாமிசத்தைப் பயன்படுத்தி தின்பண்டங்களை தயாரித்து விற்றதாக பிராந்திய பொலிஸ் தலைமையதிகாரி வெஸ்லி பெர்னான்டஸ் தெரிவித்தார்.
அவர்கள் அடுத்து இளைஞர் ஒருவரை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக