வெள்ளி, 20 ஏப்ரல், 2012

தாயின் சடலத்துடன் தன்னந்தனியே 5 நாட்களைக் கழித்த 2 வயது பாலகி

2 வயது குழந்தையொன்று வீடொன்றில் தாயின் சடலத்துடன் 5 நாட்களை தன்னந் தனியே கழித்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான செய்தி “ஏ.எஃ.பி' ஊடகத்தில் திங்கட்கிழமை வெளியிடப்பட் டுள்ளது. சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வக்கா வக்கா நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 30 வயது மதிக்கத்தக்க தாயின் அழுகிய சடலத்துடன் மேற்படி பெண் குழந்தை இருப்பதை கண்ட னர்.

போதிய உணவின்றி பலவீனமாக இருந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்படி பெண்ணின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல