வெள்ளி, 20 ஏப்ரல், 2012

அத்துமீறி வீட்டுக்குள் பிரவேசிப்பவர்களை வீழ்த்தும் தொழில்நுட்ப தரை

வீட்டிற்குள் காலடியெடுத்து வைப்பவரை தன்னியக்க ரீதியில் குறிப்பிட்ட அறைக்கு வழி நடத்திச் செல்லக் கூடியதும் அத்துமீறி பிரவேசிப்பவர்களை நிலை தடுமாறி விழச் செய்யக்கூடியதுமான அதி நவீன தரை உருவாக்கத்திற்கான உரித்துடைமை தொழில்நுட்ப நிறுவனமான “ஐ.பி.எம்' க்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் யார் உள்ளனர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தீர்மானிக்கக் கூடிய உணர் கருவிகளை மேற்படி தரை கொண்டமைந்துள்ளது.


“ஸ்மார்ட் புளோர்' என்ற இந்த தரையானது பாதங்களின் நிறை, வடிவம் மற்றும் அவற்றின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து அதன் மேற்பரப்பை பயன்படுத்து பவர் வயது வந்தவர்களா, குழந்தைகளா, செல்லப் பிராணிகளா என்பதை துல்லிய மாக மதிப்பீடு செய்கிறது.

அடையாளம் தெரியாத விருந்தினர்களையும் இனங்கண்டு கொள்ளும் இத்தரை அத்துமீறி பிரவேசிப்பவர்களை வீழ்த்தி எழுந்திருக்க முடியாது செய்கிறது.

ஏற்கனவே தனித்து வாழும் வயோதிபர்களுக்கு உதவும் வகையில் விழுந்தால் எச்சரிக்கை செய்யும் அணியக் கூடிய உணர் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல