காரால் மோதுண்டு படுகாயமடைந்த தனது நண்பனை விட்டு அகல மறுத்த நாய்
வீதியில் காரால் மோதுண்டு படுகாயமடைந்த தன் நண்பனான நாயை விட்டு அகல மறுத்து அதனருகே காவலில் இருந்த நாயொன்று இணையத்தளம் மூலம் உலகளாவிய பிரபலத்தை பெற்றுள்ளது.அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லா புயன்ட் வீதியில் கடந்த புதன்கிழமை மேற்படி நாய் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் அந்நாயருகே காவலிருந்த நாய் தொடர்பான “வீடியோ' படம் சனிக் கிழமை இணையத் தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மிருக பராமப்பு அதிகாரிகள் விபத்தில் காயமடைந்த நாயை அகற்றியதுடன் அந்நாய்க்கு காவலாக இருந்த நாயை பால்வின் பூங்கா மிருக பராமப்பு நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கிரேஸ் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நாயை தமது செல்லப்பிராணியாக தத்தெடுத்துக் கொள்ள பலரும் போட்டி போடுவதாக மேற்படி மிருக பராமரிப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக