வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஆளற்ற தீவில் தன்னந்தனியே நிர்வாணக் கோலத்தில் வாழும் வயோதிபர் (படங்கள் இணைப்பு)

இயற்கையின் மீது அளவுக்கதிக பற்றுக் கொண்ட 76 வயது வயோதிபர் ஒருவர், தனது குடும்பத்தை பிரிந்து அடிக்கடி சூறா வளிகளுக்கு முகங்கொடுக்கும் பின்தங்கிய தீவொன்றில் தன்னந்தனியாக உடலில் எதுவித ஆடையும் அணியாமல் வாழும் அதிசய சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
ஒரு கிலோமீற்றர் அகலமான சொதோபனாரி என்ற மேற்படி தீவில் கடந்த 20 வருட காலமாக மஸபுமி நாகசாகி என்ற மேற்படி வயோதிபர் வசித்து வருகிறார்.




ஆடை அணியாததால் அவர் மேற்படி தீவிலுள்ள பூச்சிகளின் கடிக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

வாரத்துக்கு ஒரு தடவை அருகிலுள்ள தீவு ஒன்றிற்கு பயணத்தை மேற்கொள்ளும் மஸபுமி நாகசாகி, தனது குடும்பத்தினரால் வழங்கப்படும் 120 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தைப் பயன்படுத்தி அரிசி கேக்குகளை வாங்கி வருகிறார்.

அவர் வாழும் தீவில் குடிநீர் இல்லாத தால் ஒரு வாரத்துக்குத் தேவையான குடி நீரையும் அத்தீவிலிருந்து அவர் எடுத்து வருகிறார்.

சிறுநீரக வடிவான சொதோபனாரியை சுற்றியுள்ள அபாயகரமான கடலில் மீன் பிடிப்பதற்கு மீனவர்கள் அஞ்சி அதனை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல