கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்
இளம் தாயொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவருக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தையை கடத்திச் சென்ற மருத்துவத் தாதியொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை கடத்தியவர்
வெர்னா மக்கிளைன் என்ற மருத்துவத்தாதியே கலா மேரி கோல்டன் (28 வயது) என்ற பெண் மீது 7 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் செய்து படுகொலை செய்து விட்டு, அவரது 3 நாள் வயதான கீகன் என்ற ஆண் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நோர்த்வூட்ஸ் பெடியற்றிக் மருத்துவ நிலையத்துக்கு கீகனை மருத்துவ பரிசோதனைக்காக கலா மேரி கோல்டன் தூக்கி வந்த போது கார் தரிப்பிடத்தில் வைத்து அவருக்கும் குறிப்பிட்ட மருத்துவத் தாதிக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையை கடத்தியவர் தனது சகோதரியுடன்
இதன் போது மருத்துவத் தாதியான வெர்னா, கலாமேரி கோல்டன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கலா மேரி கோல்டன், “எனது குழந்தை' என சத்த மிட்டுள்ளார்.
கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ் மாநிலத்தில் மருத்துவத்தாதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுள்ள வெர்னா, நோர்த்வூட்ஸ் பெடியற்றிக் மருத்துவ நிலையத்தின் ஊழியர் அல்ல என தெரிவிக்கப் படுகிறது. வெர்னா கடத்திச் சென்ற குழந்தையை தனது சகோதரியிடம் ஒப்படைத்துள்ளார். வெர்னாவுக்கு இரு சொந்தப் பிள்ளைகளும் ஒரு வளர்ப்பு பிள்ளையும் உள்ளனர். அவர் தனது கணவரிடமிருந்து இரு வருடங்களாக பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் அவர் ஒரு குழந்தையை புதிதாக தத்தெடுத்துள்ளதாக தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். தீவிர தேடுதலை மேற்கொண்டு வெர்னாவை கைது செய்த பொலிஸார், அவரால் கடத்தப்பட்ட குழந்தையான கீகனை மீட்டுள்ளனர்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக