வெள்ளி, 14 டிசம்பர், 2012

இறந்துபோன பிரபாகரனின் மருத்துவ செலவுக்கு நிதி சேகரிப்பாம்!

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மருத்துவ செலவுக்காக என்று கூறி வெளிநாடுகளில் நிதி சேகரிக்கப்படுவதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் நெடியவன் அணியினர் இந்த நிதி சேகரிப்பில் இறங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சலாந்து, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் விடுதலைப்புலிகள் நெடியவன் அணியினர் இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமான, மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மருத்துவ செலவுகளுக்காக நிதி சேகரிக்கும்படி, நெடியவன் அணி தலைவர்களில் ஒருவராக மேத்தா என்பவர் உத்தரவிட்டிருப்பதாகவும், ராவய பத்திரிகையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராவய பத்திரிகை செய்தியின்படி, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தில் ஏற்பட்ட காயங்கள் பலமாக இருப்பதால் அவரால் வெளிப்பட முடியாமல் இருப்பதாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சைக்கு பெரும் தொகை பணம் தேவைப்படுவதாகவும், விடுதலைப்புலிகள் நெடியவன் அணி செயல்பாட்டாளர்கள் சுவிட்சலாந்து, பிரான்ஸ், டென்மார்க் நாடுகளில் உள்ள தமிழ் மக்களிடம் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல