வெள்ளி, 14 டிசம்பர், 2012

வேர்ட் டாகுமெண்ட்

நாம் உருவாக்கிய சில வேர்ட் டாகுமெண்ட்களை அச்செடுக்கையில், கொட்டேஷன் மார்க் எனப்படும் மேற்கோள் குறிகள் சரியான முறையில் பிரிண்ட் ஆவதில்லை. சில வேளைகளில் இந்த குறியீடுகளுக்குப் பதிலாக வேறு குறியீடுகள் அச்சாகின்றன.

திரையில் நன்றாகத் தோற்றமளிக்கும் மேற்கோள் குறிகள், அச்சாகாமல் இருக்கலாம்; அல்லது போல்டாக, கருப்பாக # என அச்சாகலாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வேர்ட் எப்படி நீங்கள் அமைக்கும் மேற்கோள் குறிகளைக் கையாள்கின்றன என்று பார்க்க வேண்டும்.

வழக்கமான மேற்கோள் குறிகளை, வேர்ட் ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண் மூலம் புரிந்து கொள்கிறது. இதில் பிரச்னை ஏற்படுவதில்லை. நீங்கள் உங்கள் வேர்ட் தொகுப்பில் Smart Quotes வசதியை இயக்கி இருந்தால், மேற்கோள் குறிகள் தொடக்க நிலை மற்றும் முடிக்கும் நிலையில் இருப்பதன் அடிப்படையில், இரண்டு குறியீட்டு எண் மூலம் புரிந்து கொள்ளும். இந்த குறியீட்டு எண்கள் சில எழுத்து வகைகளில் தரப்பட்டிருக்காது. எடுத்துக்காட்டாக, Courier எழுத்து வகையில் இவை இல்லை. எனவே, இவை அச்சாகும் போது, அச்சடிக்கப்படுவதில்லை; அல்லது வேறு ஒரு குறியீட்டு எழுத்தை அமைக்கிறது.

இதற்கு இரண்டு தீர்வுகளைத் தருகிறேன். உங்கள் டாகுமெண்ட்டினை வேறு ஒரு எழுத்துவகையில் அமைக்கவும். எடுத்துக் காட்டாக, Courierக்குப் பதிலாக, Courier New என்ற எழுத்து வகையினை அமைக்கலாம். இந்த எழுத்துவகையில், சரியான முறையில் மேற்கோள் குறிகளுக்கான குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீங்கள் கூரியர் எழுத்துவகையை தான் பயன்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்தால், Smart Quotes வசதியை ரத்து செய்திட வேண்டும். அதற்கு Office பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், Word Optionல் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதன் இடது புறம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடுக. அடுத்து, Auto Correct என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது Auto Correct டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில்
Auto Format As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Straight Quotes with Smart Quotes என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல