புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், சில புரோகிராம்கள், அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கின்றன. சில, எந்த யூசர் அக்கவுண்ட்டில் இன்ஸ்டால் செய்கிறோமோ, அந்த பயனாளருக்கு மட்டுமே கிடைக்கின்றன. இதனை மாற்றி, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்திட......
இங்கு தரப்படும் தீர்வுகள், எக்ஸ்பிக்குப் பின்னர் வந்தவற்றில் இயங்கும். முதலாவதாக, விண்டோஸ் எம்.இ. (Windows ME) மற்றும் அதற்கு முந்தைய சிஸ்டத்திற்கென எழுதப்பட்ட சில புரோகிராம்கள், அனைத்து பயனாளர்களுக்கும் கிடைப்பதில்லை. எனவே, இவற்றை இன்ஸ்டால் செய்கையில், நீங்கள் விண்டோஸ் அட் மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் இருந்து இன்ஸ்டால் செய்திடவும். செய்தால், அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும்.
சில புதிய புரோகிராம்கள், செட் அப் விண்டோவிலேயே, இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும்படி அமைக்கவா, இல்லையா? என்ற கேள்வியைக் கேட்டு, நீங்கள் தரும் பதிலுக்கேற்ற வகையில் அமைக்கும்.
எக்ஸ்பி பயன்படுத்துவதாக இருந்தால், அனைவருக்கும் ஒரு புரோகிராம் பயன்பாட்டினைத் தருவதாக இருந்தால், புரோகிராமினைச் செயல்படுத்தும் ஐகானை, C:\Documents and Settings\All Users\Desktop அல்லது C:\Documents and Settings\All Users\Start Menu\Programs என்ற போல்டரில் வைக்கவும்.
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், parental controls பயன்படுத்தி, புரோகிராம்களைப் பயன்படுத்துவோரைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு கண்ட்ரோல் பேனலில், User Accounts சென்று செயல்படவும். முதலில் Manage Another Account என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், நீங்கள் மாற்றி அமைக்க விரும்பும் அக்கவுண்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Set up Parental Controls என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த விண்டோவில், Program Limits: Off, அல்லது Program Limits: On என்பதனைக் காணலாம். இங்கு கிடைக்கும் On அல்லது Off என்பதனைக் கிளிக் செய்து புரோகிராம் ஒன்றை, அந்த அக்கவுண்ட் பயனாளர், பயன்படுத்தலாமா என்பதனை முடிவு செய்திடலாம். நீங்கள் User can use all programs என்பதில் கிளிக் செய்தால், புரோகிராமைப் பயன்படுத்துவதில் எந்த வரையறையும் இருக்காது. User can only use the programs I allow என்பதில் கிளிக் செய்தால், புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் தேர்ந்தெடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக