புதன், 30 ஜனவரி, 2013

பசியை தணிப்பதற்க்காக சொந்த குழந்தையை சாகடித்து வேக வைத்து சாப்பிடும் சோகம்

வடகொரியாவில் பட்டினியால் தவித்த தந்தை தனது மகன்களை கொன்று அவர்களது உடல்களை வேகவைத்து சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பட்டினியால் கிடக்கும் பலர் விபரீத முடிவுகளை எடுப்பதாகவும் ஏசியா பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,”வடகொரியா ஏவுகணை சோதனை நடத்த அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அணு ஆயுத சோதனையிலும் வடகொரியா ஈடுபடுவதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனால், இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும் பல ஆண்டுகளாக பரபரப்பு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், பட்டினியில் தவித்த ஒருவர் உணவுக்காக கல்லறையில் இருந்து பேரன் சடலத்தை தோண்டி எடுத்துள்ளார். இன்னொருவர் தனது குழந்தையை சாகடித்து வேகவைத்து சாப்பிட்டுள்ளார். இப்போது 2 குழந்தைகளை கொன்று சமைத்து சாப்பிட்ட ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த செய்திகளை வடகொரிய தலைவர்கள் இதுவரை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. குறிப்பாக வடகொரியாவின் ஹவாங்கே நகரில் விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோல் நர மாமிசம் உண்ணும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன.

இது நாடு முழுக்க பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் மீடியாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சர்வதேச மீடியாக்கள் அவ்வளவு எளிதில் செய்திகளை சேகரித்துவிட முடியாது. அதனால், உள்ளூர் மக்களையே பிரபல மீடியாக்கள், பத்திரிகைகள் நிருபர்கள் போல பயன்படுத்தி கொள்கின்றன. போலீசில் உள்ள இன்பார்மர்கள் போல உள்ளூர் மக்களில் சிலர் அவ்வப்போது செய்திகளை அளித்து வருகின்றனர்.

ஹவாங்கே பகுதியில் இருந்து செய்தி அளிக்கும் ஒருவர் கூறுகையில், என் கிராமத்தில் 2 குழந்தைகளை கொன்று சாப்பிட முயன்ற தந்தையை கடந்த மே மாதம் போலீசார் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவித்துள்ளார்.

North Korean parents 'eating their own children' after being driven mad by hunger in famine-hit pariah state


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல