புதன், 30 ஜனவரி, 2013

கமலை வேதனைப்படுத்துவது தமிழக அரசுக்கு நல்லதல்ல

சினிமாவுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட கமலை வேதனைப்படுத்துவது தமிழக அரசுக்கு நல்லதல்ல என்று தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :

விஸ்வருபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு வேண்டுமென்றே தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கமலஹாசனுக்கு ஆதரவாக உள்ளனர். சினிமா துறைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டவர் கமலஹாசன். அவரை வேதனைப்படுத்துவது தமிழக அரசுக்கு நல்ல தல்ல.

தணிக்கை குழு அனுமதி கொடுத்த பிறகும் சினிமாவை தடை செய்வது என்பது இதுவரை நடந்ததில்லை. விஸ்வரூபம் சினிமாவை திரையிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்கிறார்கள். சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது தமிழக அரசின் பொறுப்பு. சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தமிழக அரசின் கடமை.

முஸ்லிம் அமைப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க சில காட்சிகளை நீக்க கமலஹாசன் சம்மதித்துள்ளார். அதன் பிறகும் விஸ்வரூபம் படத்துக்கு தடை நீடிப்பது கவலைக்குரியது. தமிழகத்தை விட்டு வெளியேறும் முடிவை கமலஹாசன் கைவிட வேண்டும். இது தொடர்பாக டெலிபோன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.

சக நடிகராக மட்டுமல்ல ஒரு கட்சித் தலைவராகவும் கமலுக்கு எனது முழு ஆதரவு உண்டு. பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்ய வில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல