புதன், 30 ஜனவரி, 2013

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! சந்தேகத்தில் கணவன் கைது (படங்கள் காணொளி, இணைப்பு)

யாழ். கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் மத்தி ஆசியப்பர் கோவிலடியிலுள்ள வீட்டு கிணற்றில் கமலதீபன் கயல்விழி (வயது 23) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.

இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல