புதன், 30 ஜனவரி, 2013

சுவைப்பதற்காக பூனை முடியை தேடித்திரியும் அமெரிக்க பெண்! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா. 43 வயதான இவர் தினமும் பூனை முடியை சுவைத்து வருகிறார். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார். .


15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் வளர்த்த பூனையை கொஞ்சி கொண்டிருந்தபோது கையில் ஒட்டிய அதன் முடியை சுவைத்தார்.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பூனை முடியை சுவிங்கம் போல் உமியத் தொடங்கினார். இப்போது அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.

ஆயிரக்கணக்கான பூனை முடி உருண்டைகளை வாயில் வைத்து மெதுவாக சுவைத்துள்ளார். இதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

“தினமும் காலை ஸ்நாக்ஸ்சுக்கு (snacks) நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடி அதன் முடிகளை சேகரிப்பேன். ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்கும். சிறிது நேரம் வாயில் வைத்து சுவைப்பேன். பிறகு எடுத்து எறிந்து விடுவேன்” என்கிறார். லிசா.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல