புதன், 30 ஜனவரி, 2013

மீண்டும் நிதி வசூலிப்பில் புலிகள், ஜேர்மன் பொலிஸ் உஷார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டாய நிதி வசூலிப்பு நடவடிக்கைகளை முறியடிக்கின்றமைக்காக ஜேர்மன் பொலிஸார் மீண்டும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.

கொட்டிங்டன் என்கிற இடத்தில் புலிகளால் கடந்த 19 ஆம் திகதி தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய புலி முக்கியஸ்தர் ஒருவர் இந்நிதி சேகரிப்புத் திட்டம் குறித்து பிரஸ்தாபித்து உள்ளார்.

பிராங்பேர்ட் என்கிற இடத்தில் சொந்தமாக காணி வாங்கி, மாவீரர் துயிலும் இல்லம் அமைக்க உத்தேசித்து உள்ளார்கள் என்றும் இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பித்து விடுவார்கள் என்றும் அறிவித்து உள்ளார்.

இத்திட்டத்துக்கு குறைந்தது ஒரு மில்லியன் யூரோ வரை தேவைப்படலாம் என்றும் தமிழ் குடும்பம் ஒன்றிடம் இருந்து தலா 2000 யூரோ வரை இவர்கள் அறவிடக் கூடும் என்று இங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் கூறுகின்றன.

இதே நேரம் தமிழ் புத்திஜீவிகள் சிலர் புலிகள் மீண்டும் நிதி சேகரிப்புக்கு தயாராகின்றமை குறித்து பொலிஸில் முறையிட்டு உள்ளனர்.

இந்நிலையில் புலிகளின் இச்செயற்பாட்டைக் கண்காணிக்கவென விசேட குழு ஒன்று பொலிஸில் தயார்ப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் இக்கட்டாய வசூலிப்புக்கு எதிராக எல்லாப் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் எவரும் அஞ்சத் தேவை இல்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல