சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை மதிக்காத கட்டடக் கம்பெனி ஒன்றுக்கு கடன் வழங்கி இப்போது சிக்கலில் மாட்டித் தவிக்கின்றனர் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவர் மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்.பி யுமான ஜெயா பச்சன் ஆகியோர்.
மும்பை அந்தேரி பகுதியில் 30 ஏக்கர் பிளாட் ஒன்று உள்ளது.அந்த இடம் மனமகிழ் மன்றம் அமைக்கவும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் அமைக்கவும் என ஒதுக்கப்பட்டிருந்தது.
பிறகு மும்பை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பகம் அமைக்கவும் அந்த பிளாட்டில் மீதமுள்ள இடத்தில் ஒரு வணிக வளாகம் அமைக்கவும்( (Mumbai Metropolitan Region Development Authority) (MMRDA).மும்பை மெட்ரோபொலிட்டன் ரீஜியன்டெவெலப்மென்ட் அத்தாரிட்டி அனுமதி வழங்கியது.
மகாராஷ்டிரா நகர அபிவிருத்தி துறையும் அந்த இடத்தை ரிலீஸ் செய்து அங்கு கட்டடம் கட்ட வேண்டுமானால் அந்த பிளாட்டை சுற்றிலும் 30 மீட்டர் சுற்றளவிற்கு கட்டுமானம் எதுவும் இல்லாமல் ஒலி மாசு எதுவும் ஏற்படாமல் வெறும்செடிகள் மற்றும் மரங்கள் மட்டுமே நடப்பட வேண்டும் என்ற விதியை புகுத்தியது.
இந்த இடத்தில் எக்ஸ்டசி ரியால்ட்டி பிரைவேட் லிமிடட் என்ற கட்டுமான நிறுவனம் வணிக வளாகம் ஒன்றை கட்டியுள்ளது.
ஆனால் நிபந்தனைப்படி சுற்று சூழலை பாதிக்காதபடி அமைக்க வேண்டிய மரம் நடுதல் போன்றவற்றை செய்யாமல் முழு இடத்தையும் இழுத்து வளைத்து கட்டடம் கட்டிவிட்டார்கள்.
இந்த கட்டுமான கம்பெனிக்கு அமிதாப்பச்சன் 2.17 கோடி ரூபாயும் அவரது மனைவி ஜெயா பச்சன் 5.03 கோடி ரூபாயும் கடனாக கொடுத்துள்ளார்கள்.
கட்டடம் கட்டிய நிறுவனம் சுற்றுச்சூழல் நிபந்தனைகள் எதையும் மதிக்காமல் அரசு உத்தரவை மீறி ஒலி மாசு ஏற்படும் விதம் பணிகளை முடித்திருப்பதை சமூக ஆர்வலரும் வழக்கறிஞரும் முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியுமான ஓய.பி.சிங் கண்டுபிடித்து அம்பலப்படுத்திவிட்டார்.
இவர்தான் இப்போது சுற்றுச்சூழலுக்கு அந்த நிறுவனம் அளிக்க வேண்டிய நிலத்தை மறுபடி கொடுக்கவேண்டும் அந்த இடத்தில் கட்டிய கட்டடங்களை இடிக்க வேண்டும் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் அமிதாப் தம்பதியினருக்கு கட்டுமான நிறுவனம் செய்துள்ள இந்த விதிமீறல் பற்றி தெரியாமல் இருக்கலாம் .ஆனால் இப்போது விதிமீறல் அம்பலத்துக்கு வந்துவிட்டது இவர்கள் அந்த நிறுவனத்துக்கு கடன் அளித்துள்ளனர் .எனவே விதிமீறலில் ஈடுபட்டுள்ள அந்த கம்பெனியிடம் வரைமுறை மீறி கட்டியபகுதியை இடித்து அந்த இடத்தில் மரங்களை நடும்படி அறிவுறுத்த வேண்டும் .அந்த பொறுப்பு கடன் கொடுத்த அமிதாப் தம்பதிக்கு இருக்கிறது என்கிறார்.
இன்னும் சில சமூக ஆர்வலர்களோ அமிதாப்பும் அவரது மனைவியும் முன்னுதாரணமாக இருந்து அந்த இடத்தை மீட்டு அங்கு மரக்கன்றுகளை நடவேண்டும் என்கின்றனர்.
கடன் கொடுத்துவிட்டு சம்பந்தமே இல்லாத வம்பில் சிக்கி இருக்கின்றனர் அமிதாப்&கோ.
அமிதாப் என்ன செய்யப் போகிறார?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக