புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபம் ரிலீஸாகும்வரை ‘தலைவா’ படத்தின் ஷூட்டிங் நடக்காது : நடிகர் விஜய் அதிரடி

கமல் சாரின் ’விஸ்வரூபம்’ படத்தின் பிரச்சனைகள் தீரும் வரை ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு நடக்காது என்று நடிகரும், அ.தி.மு.க கட்சிக்கு தனது நற்பணி மன்றத்தின் மூலம் ஆதரவு தெரிவித்து வருபவருமான நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், கமல் சாரின் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்திருப்பது வருத்தமாக உள்ளது. கமலின் ரசிகர்களில் ஒருவனாகவும், சக கலைஞாகவும் எனது மனதை இந்த பிரச்சனை வேதனையைத் தருகிறது.

அதனால் விஸ்வரூபம் படம் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து அது நல்லபடியாக வெளியாகும்வரை நான் நடித்துக் கொண்டிருக்கும் ‘தலைவா’ படத்தின் வேலைகள் எதுவும் துவங்காது என்று நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது நற்பணி மன்றம் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இன்றுவரை அந்தக்கட்சிக்கு விசுவாசமாக விஜய் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல