புதன், 29 ஏப்ரல், 2015

தேசிய கொடியிலிருந்து சிறுபான்மை அடையாளங்கள் நீக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது சட்ட நட­வ­டிக்கை அவ­சியம்–-சி.வை.பி.ராம் வலி­யு­றுத்தல்

இலங்கை தேசியக் கொடி­யி­லி­ருந்து சிறு­பான்மை அடை­யா­ளங்கள் நீக்­கப்­பட்டு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கு கடு­மை­யான கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும், கொழும்பு மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான சி.வை.பி.ராம் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை அவ­சியம் எனவும் கோரி­யுள்ளார்.

மரணத்தின் நுழைவாயிலில் இறுதி மணித்துளிகள்


மரணம் கொடு­மை­யா­னது! அது தண்­ட­னை­யாக நிறை­வேற்­றப்­ப­டுதல் அதை­விட வலிது.
தனக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு, தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்­துக்­கொண்டு, தான் கொலை செய்­யப்­படும் முறையை அறிந்­து­கொண்டு வாழ்­தலின் வலி­யையும் சுமை­யையும் சொல்லில் அடக்க முடி­யாது.

ராவோடு ராவாக கடலுக்கு அடியிலிருந்து 50 அடி மேலே வந்த 1,000 அடி நிலம்!

ஜப்பானில் உள்ள ஹொக்காய்டோ தீவில் திடீர் என்று 1,000 அடி நிலம் கடலில் இருந்து 50 அடி உயரத்திற்கு மேலே வந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

யார் இந்த மயூரன் சுகுமாறன்....?

சென்னை: இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில் ஒருவர் மயூரன் சுகுமாறன். ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான இவரது பூர்வீகம் இலங்கை.

ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழத் தமிழர் பற்றிப் படமெடுத்தார்கள்- ராஜ்கிரண் பொளேர்!

ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழத் தமிழர் பற்றிய படத்தையே இங்கு எடுத்தார்கள் என்று அதிரடியாகப் பேசியுள்ளார் ராஜ்கிரண். இலங்கைத் தமிழர், குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் சிவப்பு.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இந்தோனேசியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆஸ்திரேலியா


 இரு ஆஸ்திரேலியர்களுக்கான மரண தண்டனையை நிறுத்த ஆஸ்திரேலியப் பிரமதர் டோனி அப்பாட் (இடது) கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூதரை ஆஸ்திரேலியா திரும்பப் பெற்றுள்ளது.

இந்தோனேஷியா: எட்டுபேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்; ஒருவருக்கு ஒத்திவைப்பு

இவர்களை மன்னிக்கும்படி இறுதிவரை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன

இந்தோனேஷிய நீதிமன்றத்தால் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டுபேரின் மரணதண்டனையும் செவ்வாய்க்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அழகுக் குறிப்புகள் - மூக்கின் பரா­ம­ரிப்பு

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்­படி பல வார்த்­தை­க­ளோடு சேர்த்து மூக்கின் தோற்­றத்­தி­னையும், அள­வி­னையும் குறிப்­பி­டு­கிறோம். ஆனால் எப்­ப­டிப்­பட்ட ஷேப் உள்ள மூக்­கி­னையும் ஒழுங்­காக பரா­ம­ரித்து, அழ­காக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்­றிய கவலை தேவை­யில்லை.

சிசேரியன் பிரசவத்தை சாதாரண பிரசவமாக மாற்றலாமா?

கர்ப்பம் தரித்து தமது குழந்­தையை பிர­ச­வித்து எடுத்து பார்த்து வளர்க்க ஒரு தாய் எத்­தனை கன­வுகள் காண்பாள். அத்­த­னைக்கும் அவர் அனு­ப­விக்கும் துன்­பங்­களும் சோத­னை­களும் எத்­தனை என்­பது அந்தப் பெண்­ணுக்­குத்தான் தெரியும். இவற்றில் மன ரீதி­யான வேத­னைகள் உடல்­ரீ­தி­யான வேத­னைகள் என பல­வற்­றையும் கர்ப்ப காலம் முழு­வதும் சுமந்து இறு­தியில் தனது வயிற்றில் சுமக்கும் சிசுவை எப்­படி வெளியில் எடுப்­பது என்ற கேள்வி தான் மனதில் இருக்கும்.

பாட்டி சொல்லும் வீட்டு வைத்தியம்

சிலருக்கு காலில் ஆணி என நடக்கக் கூட முடியாமல் தவிப்பார்கள். அதற்கு 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு இவற்றை அம்மியில் வைத்து கைப்பிடி அளவுக்கு மருதோன்றி இலையையும் சேர்த்து தண்ணீர் விட்டு மை போல அரைக்க வேண்டும்.

அதன் பிறகு கால் ஆணி இருக்கும் இடத்தில் கனமாக வைத்து அதன் மீது ஒரு வெற்றிலையை வைத்து மூடி ஒரு வெள்ளைத் துணியால் இறுக்கிக் கட்டி விடவேண்டும். இரவு படுக்கப் போவதற்கு முன்பு இந்த மருந்தைக் காலில் ஆணி இருக்கும் இடத்தில் கட்டிக் கொண்டு, மறுநாள் காலை அவிழ்த்து விட வேண்டும். இவ்வாறு இடைவெளி விடாமல் தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வர பூரண குணம் கிடைக்கும்.
 =============================
பெரும்பாலானவர்களின் பற்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். அதற்கு மருத்துவம் இதோ,

சாக்குக் கட்டி 100 கிராம்,

பூங்காவி மண் (தெள்ளிய செம்மண் தூள்) 10 கிராம்,

கடுக்காய் தோல்,

மிளகு,

ஓமம்,

லவங்கப்பட்டை இவை தலா 5 கிராம் எடுத்துக் கொண்டு இவைகளை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

பொரித்து பொடித்த வெங்காயம் இரண்டையும் சமமான அளவு (5 கிராமுக்கும் குறைவாக) எடுத்துக் கொண்டு தனித்தனியாக இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

இடித்த பொடியை சலித்து எல்லா பொடிகளையும் ஒன்றாகக் கலக்கி ஒரு போத்தலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

காலை, மாலை இரண்டு வேலைகளிலும் இந்தப் பொடியை நன்றாகப் பல்லில் வைத்து அழுத்தித் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் சீக்கிரம் பற்களில் பழுப்பு நிறம் மறைந்து வெண்மை நிறம் தெரியும்.

ஈறுகளுக்கு உறுதி அளிக்கும். பல்வலி நீங்கும்.
 ==================================
அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை அதிக சூடு அல்லது இனிப்பு பலகாரங்கள் அதிக அளவு சாப்பிடுவதால் ஏற்படும் நீரிழிவுத் தொல்லைக்கு அறிகுறி.

இவர்களுக்கு இனிப்பையும், காரத்தையும் குறைப்பது நல்லது.

பாகற்காய், கோவைக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் தான்றிக்காய், கடுக்காய் இவற்றின் தோலை உரித்து விட்டு நன்றாக இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் சமமான அளவுக்கு எடுத்துக் கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

இப்படி காலை,மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.

அதன்பிறகு சிறுநீர் கடுப்பு மற்றும் நீரிழிவு ஆரம்பக் கட்டம் போன்ற தொல்லைகள் போய் விடும்.
 ===========================
தற்போது இருக்கும் காலச் சூழ்நிலைக்கு படுத்தால் தூக்கம் வருவது ரொம்ப சிரமமாக இருக்கிறது. படுத்த உடனேயே தூங்குவதற்கு பகலோ, இரவோ படுக்கைக்குப் போவதற்கு முன் உடல் களைப்பு நீங்க குளிர்ந்த நீரில் நன்றாகக் குளியுங்கள்.

 250 மில்லி அளவு பாலை நன்றாகக் காய்ச்சி அதில், சிறிதளவு கற்கண்டையும்,பேரீச்சம் பழத்தையும் போட்டுக் குடித்து விட்டுப் படுத்தால் சுகமான தூக்கம் வரும்.

சிலருக்கு அடி வயிற்றில் வலி இருக்கும்.

அதற்கு மருத்துவம், கோடைக்காலம் மற்றும் காரம் அதிகம் சாப்பிடுவதாலும் இந்த வலி ஏற்படக் கூடும்.

இவர்கள் முதலில் காரத்தை குறைக்க வேண்டும்.

தேங்காயை அரைத்து கெட்டியாகப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அதில் ஒரு ஸ்பூன் சுத்தமான கசகசாவை தேங்காய்ப் பால் விட்டு அம்மியில் வைத்து அரைத்து விழுதாக்கி தேங்காய்ப் பாலுடன் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்கள் அடி வயிற்றுவலிப் பிரச்சினை சரியாகி விடும். அல்லது நீராகாரத்தில் வெந்தயம் (தனியா) சிறிதளவு பொடியாக்கிப் போட்டு அதிகாலையில் குடிக்கலாம். அல்லது இளநீரில் வெந்தயப் பொடி போட்டும் குடிக்கலாம். இதில் எதை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
 ===========================
திடீர் என்று மூச்சுப் பிடித்துக் கொண்டு அவஸ்தைப் படுவோர்களுக்கு, இது வாயுத் தொல்லை தொடர்பாகவும் இருக்கலாம்.

ஓமத்தைப் பொடி செய்து சமமான அளவு சர்க்கரையைச் சேர்த்து மூச்சுப்பிடிப்பு அல்லது வலி ஏற்படும் சமயத்தில் சாப்பிட வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று வேளைகள் சாப்பிட்டாலே பூரண குணமடைந்து விடும்.

வாயு சம்பந்தப்பட்ட பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஜீரணம்,வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தாலும் இந்த மருத்துவம் குணப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட பக்குவத்தில் மருந்தை சாப்பிடச் சொல்லவும். கண்டிப்பாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Share |
Image Hosted by ImageShack.us

யுவதி குளித்ததை படம்பிடித்த முல்லையில் மாட்டிய ஆசாமி.

முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற குறித்த நபர் , அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழருக்கு இன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது!

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நிலையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையிலும், ஆண்ட்ரூவிற்கும், அவரது காதலிக்கும் மனதை உருக்கும் வகையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ராகுல் மாட்டுக்கறி சாப்பிட்டு கேதார்நாத் போனதால் நிலநடுக்கம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை மேற்கொண்டதாலேயே நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்ஷி மகாராஜ் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நேபாள நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவன் எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது உங்­க­ளுக்கும் அபா­ய­க­ர­மா­னவன்



ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு சிரிய செயற்­பாட்­டாளர் எச்­ச­ரிக்கை

கைக்­குண்டு, துப்­பாக்கி மற்றும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் வழங்­கப்­பட்ட பிறப்புச் சான்­றிதழ் என்­ப­வற்­றுக்கு அருகில் புதி­தாக பிறந்த குழந்­தை­யொன்று உறங்­கு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­ட­மொன்றை அந்த தீவி­ர­வாத குழு­விற்கு எதி­ரான செயற்­பாட்­டாளர் ஒருவர் இணை­யத்­த­ளத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை மீள வெளி­யிட்டு, "இந்தக் குழந்தை எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது உங்­க­ளுக்கும் அபா­ய­மிக்­க­தாகும்" என எச்­ச­ரித்­துள்ளார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை மகள் விடுதலை செய்யப்படவில்லை உதய சிறியின் தாய் தகவல்

ஜனா­தி­பதி எனது மக­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்­கியும் இது வரை அவர் விடு­தலை செய்­யப்­ப­டா­தது பெரும் கவ­லை­ய­ளிக்­கின்­றது என சிகி­ரியா மலையில் தனது பெயரை எழு­திய குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி உதயசிறியின் தாய் எஸ். தவ­மணி தெரி­வித்தார்.

இந்தோனேஷியா: மரண தண்டனைக் கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வந்தனர்

இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்படவிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினர் கடைசி முறையாக அவர்களைப் பார்க்க சிறைக்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.

திங்கள், 27 ஏப்ரல், 2015

கேரள சட்டமன்ற நிகழ்ச்சிக்கு குடித்துவிட்டு வந்த ஊர்வசி .. வைரலாகும் வீடியோ

கேரள சட்டமன்ற நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்த ஊர்வசி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் பரபரப்பாக உலா வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த கேரள அரசின் சட்டமன்ற நிகழ்ச்சியில் அழைப்பாளராக வந்திருந்தார் நடிகை ஊர்வசி.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

"என் உடலை தயவுசெய்து எரித்து விடுங்கள்"... (Burn My Body) பாலியல் வன்கொடுமையின் கோரமுகம்!

வாழ்க்கையின் இயல்பு மாறி பிரச்சினைகளில் தத்தளிக்கும்போது மெல்லிய மனம் கொண்ட பெண்களின் முடிவு எப்போதுமே "தற்கொலை" என்பதுதான்.
பொதுவாகவே ஆண்கள் இதயத்தில் வலிமையானவர்கள், மூளையில் வலிமையற்றவர்களாம். ஆனால், பெண்களுக்கு மூளையின் வலிமை அளவிற்கு இதயமும், உடலும் வலிமையாக இருப்பதில்லை. அதனால்தான் எளிதில் ஏமாந்தும் போகின்றார்கள்... இறந்தும் போகிறார்கள்.

‘சாரா’... டயானா- சார்லஸ் தம்பதிக்கு பிறந்த ரகசிய மகள்..? அமெரிக்க பத்திரிக்கையால் புதிய சர்ச்சை!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவிற்கு இரண்டு மகன்களைத் தவிர ரகசியமாக வேறொரு மகள் இருப்பதாக அமெரிக்காவின் பிரபல வாரப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசியப் பேச்சுத் தமிழ்

மலேசியாவில் சுமார் (2.5 மெய்யிரம்) 25 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். மலேசிய தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் அழகான இனிமையான தமிழைக் கேட்கலாம். அறிவிப்பாளர்கள் வேறுமொழி கலவா தூயதமிழில் பேசுவதைக் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கும். குறிப்பாக, THR Raaga எனப்படும் வானொலி அறிவிப்பாளர்கள் அழகாக தமிழில் பேசுவார்கள். சுழியம், இணையம், வலப்பக்கம், கைப்பேசி.. இப்படி ஏராளமான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியே பேசுவார்கள். மேலும், ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையின் விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களும் அழகிய தமிழிலே பேசுவார்கள்.

15 வருடங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து தளர்வடையச் செய்யும் போர் உத்தி மூலம் எப்படி எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவைக் கைப்பற்றியது

பகுதி – 2

இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆep phototனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசசபை பகுதி முகாம்களில் நிலை கொண்டிருந்தது. 53வது படைப் பரிவு ஒரு உயர்தர படையாகும், அதற்கு அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சி வழங்கப் பட்டிருந்தது.

15 வருடங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து தளர்வடையச் செய்யும் போர் உத்தி மூலம் எப்படி எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவைக் கைப்பற்றியது

பகுதி – 1

“எல்லோரும் இளவரசனை பாராட்டினார்கள்
அவர்தான் இந்த பெரிய யுத்தத்தை வெற்றி கண்டவர்”
“ஆனால் இறுதியில் அதனால் என்ன நன்மை ஏற்பட்டது?”
என்று சொன்னார் சிறியவரான பீற்றர்கின்
“ஏன் நான் அதைச் சொல்ல முடியாது” என்று அவர் கேட்டார்
“ஆனால் அது பிரசித்தமான ஒரு வெற்றி”
-றொபேட் சவுத்தி – “பிளென்ஹெயிம் யுத்தம்”

15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு முகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.ரீ.ரீ.ஈ) கைப்பற்றப்பட்டது. வன்னி பெருநிலப் பரப்பை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப் பகுதியான பூசந்திதான் ஆனையிறவு. யாழ்ப்பாணம் - கண்டி வீதி அல்லது ஏ – 9 நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாண தொடரூந்து பாதை ஆகிய இரண்டுமே ஆனையிறவின் ஊடாகத்தான் செல்கிறது, மற்றும் இந்த குறுகிய நாடா போன்ற நிலப்பகுதியை ஒரு அர்த்தத்தில் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில் என்றும் கூறலாம். ஆனையிறவின் வீழ்ச்சி, அதாவது அந்தப் பிரதேசம் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது நீண்ட தமிழ் ஈழப் போரில் ஒரு வரலாற்று அடையாளமாக கருதப்படுகிறது.

பால்கனியில் தொங்கிய பச்சிளம் குழந்தை... பத்திரமாக மீட்ட தமிழர்களுக்கு விருது

சிங்கப்பூர்: அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியின் மாடியில் தவறிவிழுந்து தொங்கிக்கொண்டிருந்த பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி ஹீரோக்களாக மாறியுள்ளனர் இரண்டு தமிழர்கள். சிங்கப்பூரில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர்களுக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி கவுரவித்துள்ளது.

வியாழன், 23 ஏப்ரல், 2015

சுவாச சீராக்கி உப­க­ர­ணத்தால் பெண்ணின் நுரை­யீ­ர­லுக்குள் ஊடு­ரு­விய தோட்டுச் சுரை

 The 41-year-old Australian woman had a medical emergency on New Year's Eve after inhaling an earring into her lungs. An X-ray shows the earring lodged in her right bronchus - the airway leading to the lungs
பெண்­ணொ­ருவர் தனது தோட்டு சுரை நுரை­யீ­ரலில் சிக்­கிய நிலையில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வரு­டங்­க­ளாக சங்­கி­லியால் கட்டி வைத்த மனைவி

தனது கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வருட கால­மாக வீட்­டுடன் இணைந்த மரத்­தா­லான குடி­லொன்றில் மனை­வி­யொ­ருவர் சங்­கி­லியால் கட்டி சிறை வைத்த சம்­பவம் பெருவில் இடம்­பெற்­றுள்­ளது.

முன்னாள் பெண் போராளி தீயில் கருகி மரணம்!

முன்னாள் பெண் போராளி ஒருவர் தீயில் எரிந்து சிகிச்சை பயனளிக்காது யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

வடக்கில் தாயின் சோகம்

வலி. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நடக்கும் எல்லா கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கெண்டிருக்கிறோம். இடம்பெயர்ந்து 25 வருடங்கள் சகலவற்றையும் இழந்து 15ற்கும் மேற்பட்ட வாடகை வீடுகளில் வாழ்ந்து உழைக்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கே போதாத நிலையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த உடனேயே எங்கள் சொந்த மண்ணுக்கு வந்துவிட்டோம்.

20 ஆண்டுகளாக படுக்கையில் இருப்பவரை காதலித்து மணந்த புதுமைப்பெண்

சிவகுலதேவிக்கு படுக்கையில் இருந்தவாறே தாலி கட்டுகிறார் ஜெயகுமார்.

படுக்கையிலேயே 20 ஆண்டுகளாக இருக்கும் இளைஞரை காதலித்து மணந்தார் புதுமைப்பெண்.

ஆடம்பரம், அழகு, ஆஸ்தி, அந்தஸ்து என ஒவ்வொன்றாக பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்களில் பல பிளவுபட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இவற்றுக்கு மத்தியில் மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்து கைகூடிய காதல் திருமணம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

காசி ஆனந்தனிடம் காசை சுத்திய தேனிசை செல்லப்பா லண்டனில் கதறி அழுதார் !

யார் இந்த தேனிசை செல்லப்பா ? இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டு மாநிலத்தில் , எங்கோ ஒரு மூலையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில் சில கச்சேரிகளை நடத்தி பிழைத்து வந்தார்.

இன் நிலையில், விடுதலைப் புலிகள் இவரை 1990ம் ஆண்டு இனங்கண்டு யாழ் அழைத்து வந்தார்கள். புலிகளின் கடல் புற இவரை கள்ளத்தோணியில் ஏற்றி யாழ் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

"அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க” - சுஹாசினியின் ’மெளஸ்’ பேச்சுக்கு கமல் பதில்!

'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது சுஹாசினி மணி ரத்னம் பேசியதாவது:

இனவெறியைத் தூண்டுவதாக ஐஸ்வர்யா ராய் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு!

நகைக்கடை விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இனவெறி மற்றும் குழந்தைத் தொழிலை அது ஊக்குவிக்கிறது என்று புகார் எழுந்ததைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது.

புதன், 22 ஏப்ரல், 2015

தொடர்ந்து சிறுநீர் வெளியேறி அவதியுற்ற சிறுமி.. ஆபரேஷனில் சரி செய்து சாதனை படைத்த சென்னை ஜி.எச்.!

சென்னை: தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் தொல்லையால் அவதிப்பட்ட சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் கூடுதல் சிறுநீர் குழாயை வழக்கமான குழாயுடன் இணைத்து, அச்சிறுமிக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளனர் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள்.

செம்மரக் கடத்தலில் சிக்கிய நடிகை நீத்து அகர்வால்... மாட்டி விட்ட மஸ்தான்... போலீஸ் தேடுகிறது!

ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தெலுங்குப் படத்தில் நடித்து வந்த நடிகை நீத்து அகர்வால் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தயாரிப்பாளர் மஸ்தான் வாலி என்பவர்தான் மாட்டி விட்டுள்ளார். இதையடுத்து தலைமறைவான நீத்து அகர்வால் மீது கர்னூல் போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடி போலீஸ் படை பெங்களூரு மற்றும் மும்பை விரைந்துள்ளது.

செம்மரக் கடத்தலில் நடிகர் கைதானது உண்மைதான்.. ஆனால் அவர் அல்ல.. இது "முன்னவர்" சரவணன்!

சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீஸார் சரவணன் என்ற பெயரில் ஒருவரைக் கைது செய்துள்ளது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. இவரும் நடிகர்தான். ஆனால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகர் சரவணன் அல்ல என்றும் கடத்தல் பணத்தில் படம் எடுத்து நடிகராக அவதாரம் பூசிக் கொண்ட சி. சரவணன் என்று தெரிய வந்துள்ளது. இந்த சரவணனின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் (பாடி) ஆகும். இவரைத்தான் தற்போது சித்தூர் போலீஸார் கைது செய்துள்ளனராம்.

உயர வித்தியாசத்தைப் பொருட்படுத்தாத விநோத காதல்; அதிசயிக்க வைக்கும் ஜோடி(படங்கள் இணைப்பு)

உல­கி­லேயே மூன்­றா­வது உய­ர­மான நப­ராக விளங்கும் 7 அடி 8 அங்­குல உய­ர­முடைய இளை­ஞரும் 5 அடி மட்­டுமே உய­ர­முடைய குள்­ள­மான பெண்ணும் ஒரு­வ­ரிடம் ஒருவர் மனதைப் பறி­கொ­டுத்து திரு­மணம் செய்த சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.

பசில் ராஜபக்ஸ கைது

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செயல்படாத கணினியை "தண்டித்த" அமெரிக்கர் கைது!

உங்கள் கணினி சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ? அதை சரி செய்ய தொழில்நுட்பம் தெரிந்தவரின் உதவியை நாடுவீர்கள். சரிசெய்யும் செலவு அதிகம் என்றால் ,புதிய கம்ப்யூட்டர் வாங்கலாமா என்று யோசிப்பீர்கள்.

இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்பது என்ன?

பேஸ்புக் நிறுவனம், பெரிய அளவில் இயங்கும் மொபைல் போன் நிறுவனங்களுடனும், சாம்சங் எரிக்சன் மீடியா டெக், நோக்கியா, ஆப்பரா சாப்ட்வேர் மற்றும் குவால்காம் போன்ற மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடனும் இணைந்து, 2013 ஆம் ஆண்டில், Internet.org என்பதை அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கம், வளரும் நாடுகளில் இணைய சேவைகளை முன்னேற்றமடையச் செய்வதுதான்.

எக்ஸெல் டிப்ஸ்....

சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்...

தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.

புகை பிடிப்பதை நிறுத்த ஒரு இணையதளம்

நம்மில் பலர் தாங்கள் புகை பிடிப்பதனை நிறுத்த இருப்பதாகக் கூறி, அதற்கான நாளையும் அறிவிப்பார்கள். புத்தாண்டு தொடக்கத்தில் இத்தகைய சபதங்களை எடுப்பவர்களே அதிகம். இதில் என்ன வேடிக்கை எனில், இவர்களில் பலர் அடுத்த ஆண்டும் இதே அறிவிப்பை வெளியிடுவார்கள்.

பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு வாரிசு

சமூக இணைய தளமாகிய பேஸ்புக், அண்மையில், 'Legacy Contact' என்னும் டூல் ஒன்றைப் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இத்தளத்தில் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்தால், அவருடைய அக்கவுண்ட்டினை, அவரின் பக்கத்தினை நிர்வகிக்க ஒருவரை நியமிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்

எப்2 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் மாற்ற
எப்3 - பைல் அல்லது டூல் பாரினைத் தேட
எப்4 - விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அட்ரஸ் பார் பட்டியலைக் காட்ட
எப்5 - அப்போதைய விண்டோவினை ரெப்ரெஷ் செய்திட
எப்6 - ஒரு விண்டோ அல்லது டெஸ்க்டாப்பில் காட்டப்படும் ஸ்கிரீன் ஆப்ஜெக்ட்கள் ஒவ்வொன்றாகச் செல்ல

எக்ஸெல் டிப்ஸ்...

ஒர்க் ஷீட்டில் என்டர் கீ

எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும்.

வேர்ட் டிப்ஸ்....

ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்:
Alt O, B : தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.

கம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள்

பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

BIOS என்பதும் Firmware என்பதும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா?

BIOS என்பது கம்ப்யூட்டர்களுக்கான Firmware. BIOS என்பதை Basic Input/Output System என விரிக்கலாம். இதனை இன்னும் விரிவாகச் சொல்கையில், பல வகைகள் இருப்பதனைக் காணலாம். அவை System BIOS, ROM BIOS, or PC BIOS. கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில், அதாவது பூட் செய்கையில், கம்ப்யூட்டரைத் தயாரித்த நிறுவனம் பயன்படுத்தும் அதனுடைய Firmware தான், BIOS. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் உள்ளாக இந்த BIOS Firmware அமைக்கப்படுகிறது.

crdownload என்னும் பெயர் கொண்ட பைல்கள்

நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி, பைல்களை, அது ஆடியோ அல்லது வீடியோ என எதுவாக இருந்தாலும், தரவிறக்கம் செய்கையில் முதலில் இந்த துணைப் பெயருடன், பைல் இறங்கத் தொடங்கும்.

எக்ஸெல் டிப்ஸ்... ஹெடர் - புட்டர் எழுத்துக்கள்:

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கப்படும் ஹெடர் மற்றும் புட்டர்களில் உள்ள டெக்ஸ்ட்டை நம் இஷ்டப்பட்ட அளவில், சாய்வாக அல்லது குறுக்குக் கோடு, கீழ்க்கோடு சேர்த்து அமைக்கும் வசதி உண்டு. இது மட்டுமின்றி ஹெடர் புட்டர்களில் அமைக்கப்படும் பல விஷயங்களை நம் விருப்பப்படி மாற்றி வடிவமைக்கும் வசதியும் எக்ஸெல் தொகுப்பில் தரப்பட்டுள்ளது.

எக்ஸெல் டிப்ஸ்... ஷார்ட்கட் வழிகள்:

Ctrl+-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
f2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.

Ctrl+-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.

Ctrl- +Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.

வேர்ட் டிப்ஸ்... விரைவாகப் பக்கங்களைக் காண:

மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும்.

வேர்ட் டிப்ஸ்... வண்ணங்களில் டெக்ஸ்ட் ஹைலைட்:

அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.

“ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்” ActiveX Control

ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பவை அடிப்படையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள். இவை விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவர்களின் எல்லைக்குள்ளேயே இயக்க இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. ஏறத்தாழ ஜாவா ஆப்லெட் எனப்படும் புரோகிராம்களின் செயல்பாட்டினை ஒத்ததே இவை.

எக்ஸெல்டிப்ஸ்... டேட்டாக்களை வரிசைப்படுத்த, படுக்கை வரிசை இணைக்க, குழுவாகக் கட்டமிட

டேட்டாக்களை வரிசைப்படுத்த:

எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்... காப்பி/பேஸ்ட், காப்பி அல்லது மூவ், ட்ராப் ஷேடோ

காப்பி/பேஸ்ட்:

வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், வேறு ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டும் வேலையை மேற்கொள்வோம். அப்போது டெக்ஸ்ட் ஏற்கனவே எந்த பார்மட்டில் உள்ளதோ, அதே பார்மட்டில் ஒட்டப்படும்.

இது ஒட்டப்படும் டாகுமெண்ட்டுடன் ஒத்துப் போகாத வகையில், தேவையற்ற போல்ட், இடாலிக்ஸ் ஆகியவற்றுடன் அமைக்கப்படும்.

கெட்டுப்போன பழைய சிடியில் உள்ள படங்கள் மற்றும் விடியோ பைல்களை மீட்கும் வழி

உங்களுடைய சிடியில் உள்ள படங்களை, அந்த பைல்கள் சிறிதளவு கெட்டுப் போயிருந்தாலும், மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதற்கான அப்ளிகேஷன்களும் உள்ளன. அதற்கு முன் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

எக்ஸெல் டிப்ஸ்... டேட்டா மட்டும் காப்பி செய்திட:

எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், செல் கொண்டுள்ள டேட்டாவை, வேறு ஒரு செல்லில் ஒட்ட காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னையை எதிர்நோக்கி இருப்பீர்கள். டேட்டா மட்டும் காப்பி ஆகாது. அது எந்த பார்மட்டில் உள்ளதோ அந்த பார்மட்டும் சேர்ந்தே காப்பி ஆகும்.

எக்ஸெல் டிப்ஸ்... கிரிட் லைன் வண்ணம் மாற்ற:

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், தகவல்கள் கொண்டுள்ள செல்களைப் பிரித்துப் பார்க்க, செல்களின் கிரிட் லைன்கள் வண்ணத்தில் அமைவது நமக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, தொடக்கத்தில் இந்த செல் பார்டர் கோடுகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

எக்ஸெல் டிப்ஸ்... நெட்டுவரிசை பிரித்தல்:

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்?

வேர்ட் டிப்ஸ்... புதுவகை வேர்ட் பார்மட்டிங்:

பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம்.

வேர்ட் டிப்ஸ்... ரீபிளேஸ் டெக்ஸ்ட் தெரிய:

வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இடத்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிடத்தில் சென்று நிற்கும்.

முரசு அஞ்சல் முற்றிலும் இலவசம்

தமிழ் மொழியைக் கம்ப்யூட்டரிலும், இணையத்திலும் பயன்படுத்த உதவியாக இருந்து வரும் “முரசு அஞ்சல்” மென்பொருளின் 30 ஆவது ஆண்டுவிழா சென்ற மார்ச் மாதம் சிறப்பாக, மலேசியாவில், கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது. ஏறத்தாழ, உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர்களால் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், இதனை உருவாக்கி வழங்கி வரும் முத்து நெடுமாறன், மென்பொருளின் ”முதல் நிலைப் பதிப்பு” என்னும் சிறப்புப் பதிகையை, பயனாளர்களின் சொந்தப் பயனுக்கு இலவசமாகவே அளிப்பதாக அறிவித்தார்.

பேஸ்புக் தகவல்களை சிலருக்கு மட்டும் மறைக்க

நம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, பேஸ்புக் சமூக இணையதளம் சிறந்த ஒரு மேடையாக நமக்குக் கிடைத்துள்ளது. சில நேரங்களில், முக்கியமான தகவல் ஒன்றைப் பதிவிட விரும்புவோம். ஆனால், அந்த குறிப்பிட்ட தகவலை மட்டும் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நம் நண்பர்கள் பார்க்கக் கூடாது என எண்ணுவோம்.

ஏற்கனவே, நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு நம் நிலைத் தகவல் சென்றுவிடும். அதெப்படி ஒரு சிலருக்கு மட்டும் அதனை மறைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? ஆம், பேஸ்புக் தளத்தில் அதற்கான வசதி உள்ளது. அந்த வசதியைப் பயன்படுத்தும் வழிகளைப் பார்க்கலாம்.

அறுவை சிகிச்சை பிரசவத்தால் ஏற்படும் பிரச்சினைகள்...

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே.

கர்ப்பகால இரத்தப்போக்கானது கருச்சிதைவின் அறிகுறியாக இருக்கலாம்!

கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்த பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும். நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள்.

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

கடினமாக இருக்கும் சருமத்தை இயற்கையான முறையில் மென்மையாக்க!

அனைவருக்குமே அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் பல அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தைப் பராமரிப்பார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் நிறைய பணம் செலவழித்து அழகு நிலையங்களுக்கு சென்றால் மட்டும் அழகு வந்துவிடாது.

பவர்பேங்க் (power bank)

பவர்பேங்க் (power bank) என்பது, ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் அடங்கிய ஒரு சாதனம். இதனை சார்ஜ் செய்து கொண்டு, பின்னர், இதனைப் பயன்படுத்தி, மொபைல் போன்களையும் அது போல குறைந்த மின் சக்தியில் இயங்கும் சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனை, இணையம் மூலம் கண்டுபிடிக்கலாம்

தொலைந்து போனால் மட்டுமல்ல; வீட்டில் எங்காவது மறந்து வைத்திருந்தாலும், அதனைக் கண்டறிந்துவிடலாம். எந்தக் கம்ப்யூட்டருக்கும் சென்று, கூகுள் மூலம் android device manager என்று தேடவும்.

4 ஜி ப்ளஸ்

4ஜி ப்ளஸ் என்பது, சில நாடுகளில் 4ஜி அலைவரிசையினை அழைக்கும் பெயர் ஆகும். இன்டர்நெட் வேகம் சில ஆண்டுகள் வரை 3ஜி மற்றும் 4ஜி என மட்டுமே இருந்து வந்தது.

பாஸ்வேர்டை நான் தருகிறேன்

யாஹூ மெயில் தளத்தில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா! இனிமேல் உங்களுக்கான பாஸ்வேர்டை நீங்கள் நினைவில் கொள்ளத் தேவையில்லை. தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் அந்த தளமே உங்களுக்கான பாஸ்வேர்டை அனுப்பும். நீங்கள் நினைவில் வைத்து தடுமாறும் பழக்கமே உங்களுக்குத் தேவையில்லை. யாஹூ அனுப்பும் பாஸ்வேர்ட் டெக்ஸ்ட் பைலுடன் உங்கள் போனுக்கு அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்ட் அப்போதைய பயன்பாட்டிற்கு மட்டுமே. அடுத்த முறை அஞ்சல் படிக்க முற்படுகையில், அந்த சமயத்திற்கான பாஸ்வேர்ட் அதே முறையில் வழங்கப்படும்.

பேஸ்புக் நீக்கிய உணர்ச்சிப் படம்

நாம் செய்திகளை, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம் உணர்வுகளைச் சிறிய படங்களாகக் காட்ட எமோட்டிகான் அல்லது ஸ்மைலி என்ற சிறிய படங்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன.


யு.எஸ்.பி. டைப் சி : சில குறிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யு.எஸ்.பி. டைப் சி போர்ட் தரப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தவுடன், பலரும் இது குறித்து தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். முதன் முதலில் ஆப்பிள் நிறுவனக் கம்ப்யூட்டரில் இது வந்தாலும், இந்த வகை யு.எஸ்.பி. போர்ட், ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட வடிவமைப்பு இல்லை. யு.எஸ்.பி. பயன்பாட்டில், இது ஒரு புதிய கட்டமைப்பினையும் செயல்முறையினையும் கொண்டுள்ளது. இது விரைவில், தற்போது யு.எஸ்.பி. பயன்படுத்தப்படும் அனைத்து சாதனங்களிலும், பழைய முறை வடிவமைப்பின் இடத்தில் இடம் பெறும்.

விண்டோஸ் 7 ல் ரைட் மவுஸ் கிளிக்கின, கீ போர்ட் மூலம் பெற

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ரைட் கிளிக் செயல்பாடு நமக்கு மிகவும் உதவியாக உள்ளது. எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடுங்கள். எத்தனை வகை வேலைகளுக்கு, நமக்கு மெனு கிடைக்கிறது என்பதனைப் பார்க்கலாம்.

விண்டோஸ் 7 ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 புரோகிராமினை நீக்க

விண்டோஸ் 7 ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமினை நீக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. முதலில் விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும். இதில் கண்ட்ரோல் பேனல் டேப் அழுத்தி, அதனைப் பெறவும். பின்னர், Programs and Features செல்லவும். இங்கு இடது பக்கம் உள்ள பிரிவில் Turn Windows Features on off என்ற ஆப்ஷன் இடது பக்கம் கிடைக்கும். இதில் கிளிக் செய்து அந்த புரோகிராமினை இயக்கவும். இங்கு View installed updates என்பதில் கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் டிப்ஸ்...

சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்!

வேர்டில் நான்கு ஆட்டோக்கள்: வேர்ட் புரோகிராமில், நான்கு ஆட்டோக்கள் ("auto") தரப்பட்டுள்ளன. இந்த நான்கு ஆட்டோ டூல்களும், அவை AutoText, AutoComplete, AutoCorrect, மற்றும் AutoFormat ஆகும். இவற்றின் மூலம் டாகுமெண்ட்களை விரைவாகவும், வேகமாகவும், எளிதாகவும், ஒரே மாதிரியான வகையிலும் தயாரிக்க உதவுகின்றன.

22 - 25 வயது இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.....

1) உங்கள் காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளுக்கெல்லாம் காதலன் இருப்பான், நீங்கள் மட்டும் தனிமையில் இருப்பீர்கள். புறக்கணிக்கப்பட்டதாய் உணர்வீர்கள்.

விண்டோஸ் 10 க்கு மாறப்போறீங்களா!

2015 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப சாதனமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், அனைத்து தனிநபர் பயன்பாட்டிற்கும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை, காசு கொடுத்து வாங்கியிருந்தாலும், திருட்டுத்தனமாக நகலெடுத்துப் பதிந்து இயக்கி வந்தாலும், அவர்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் மேலும் ஒரு தெளிவினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்

பிரவுசர் வழியாக இணையத்தை நாடுகையில், இணைய தளங்களைத் திறக்க முற்படுகையில் நமக்குப் பலவகையான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளைப் பார்த்தவுடன், ''அவ்வளவுதான், இந்த இணைய தளம் சரியில்லை. நம்மால் அணுக முடியாது” என்று முடிவு செய்து விலகிவிடுகிறோம். ஆனால், அந்தப் பிழைச் செய்திகளை விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டால், நாம் இலக்கு வைத்திடும் இணைய தளங்களில் பெரும்பாலான தளங்களைப் பிற வழிகளில் அணுகிப் பார்த்து விடலாம் என்பதே உண்மை.

இந்தி திவாஸ் விருது பெயர் மாற்றம் ; இந்திரா- ராஜிவ் பெயர் நீக்க முடிவு

இந்தி மொழி வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் ஊக்குவிப்பு தொடர்பான விருதுகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்திரா, ராஜிவ் பெயர்களில் வழங்கப்பட்டு வந்த விருதுகள் வேறு பெயர்களில் வழங்கப்பட உள்ளன.

அமிதாப், ஐஸ்வர்யாராய்க்கு தடபுடல் விருந்து கொடுத்த பிரபு


நகைக்கடை திறப்பு விழாவுக்கு வாங்க... மத்தியான சாப்பாடு நம்ம வீட்லதான்... என்று விளம்பரத்திலேயே அமிதாப், ஐஸ்வர்யா ராயை அழைத்தார் பிரபு சொன்னது போலவே சென்னைக்கு வந்த நட்சத்திரங்களுக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்திவிட்டார் பிரபு. சிவாஜி கணேசன் உருவப்படத்தை பார்த்து நெகிழ்ந்த அமிதாப் பச்சன், புனிததலத்திற்கு வந்தது போல உணர்ந்ததாக கூறினார்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஐந்து வயதை எட்டிய ஐபேட்

டிஜிட்டல் சாதனங்களின் சரித்திரத்தில், இமாலய சாதனை படைத்த பெருமை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனத்திற்கு உண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் டேப்ளட், ஒரு தனி தொழில் பிரிவைத் தொடங்கி வைத்தது; இன்று வரை அது உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகிறது.

எக்ஸெல் டிப்ஸ்...ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை:

எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள்.

எக்ஸெல் டிப்ஸ்... எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்:

எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

வேர்ட் டிப்ஸ்! வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு:

வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திடலாம்?

வேர்ட் டிப்ஸ்!.. ஸ்கிரீன் டிப் தோற்றம்:

வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன.

கூகுள் நீக்கிய திருட்டு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்

நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், இதற்கென நீங்கள் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொண்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில் பல, உங்கள் கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக இருக்கலாம். இந்த புரோகிராம்கள், நீங்கள் இணைய உலாவில் இருக்கையில், விளம்பரங்களைக் காட்டுபவையாக உள்ளன. அந்த விளம்பரத்தில் சிக்கி, அவற்றில் கிளிக் செய்கையில், அவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அப்படியே சுருக்கி நகலெடுத்து அனுப்புகின்றன. இதனால், அந்த இணைய தளங்கள் பாதுகாப்பானவையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் தரும் தகவல்கள் இந்த விளம்பரங்களால் திருடப்படுகின்றன.

என்னைப் பின் தொடராதே

பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கையில், பல்வேறு புரோகிராம்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் தேடல்களைக் கண்காணிக்கின்றன.

நம் தேடலுக்கேற்ற வகையில், விளம்பரங்களை நாம் எந்த தளம் சென்றாலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன.

இவர் தான் பில் கேட்ஸ்

அமெரிக்காவில், கம்ப்யூட்டரைக் கொண்டிருந்த ஒரு சில பள்ளிகளில் ஒன்றான ”லேக்சைட் பள்ளி (Lakeside School)”யில் பில் கேட்ஸ் மாணவனாகச் சேர்ந்தார். அதுவே அவருக்குக் கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் கொள்ள, காரணமாய் இருந்தது.

மைக்ரோசாப்ட் 40

  Paul Allen  and  Bill Gates

கல்லூரியில் தங்களின் படிப்பை முடிக்காமல் வெளியேறிய இரண்டு மாணவர்கள் தொடங்கிய சாப்ட்வேர் நிறுவனம், இன்று உலகையே மாற்றி, தனி மனிதர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறி, தொடர்ந்து இயங்கி, ஏப்ரல் 4 ல் தன் 40 ஆவது ஆண்டினைத் தாண்டியது. ஆம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயது 40. அதனைத் தொடங்கிய பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோர் தான், அந்த இரண்டு மாணவர்கள். நிறுவனத்தைத் தொடங்கிய போது, பில் கேட்ஸ் வயது 19. ஆலன் வயது 22.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல