செவ்வாய், 3 நவம்பர், 2015

கம்ப்யூட்டரை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்தபோது இழந்த ஆடியோவினைத் திரும்பப் பெறும் வழி

கம்ப்யூட்டர் ஒன்றை, அதன் பழைய விண்டோஸ் பதிப்பிலிருந்து புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்கையில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, கம்ப்யூட்டரின் டிவைஸ் ட்ரைவர்களில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதில் சவுண்ட் கார்டும் ஒன்றாகும். ஆனால், கட்டாயமாக, பாதிப்பு ஏற்படும் எனக் கூற முடியாது. ஆடியோவின் புதிய ட்ரைவர் சாப்ட்வேர் காப்பி ஒன்றைப் பெற்றுப் பயன்படுத்தலாம். இதற்கு ஸ்டார்ட் மெனு சென்று, அதில் Device Manager என டைப் செய்tது, அதில் கிடைக்கு முடிவுகளில், முதல் முடிவின் மீது கிளிக் செய்திடவும்.



அடுத்து, “Sound, video and game controllers” என்ற பகுதியில், உங்கள் கம்ப்யூட்டரின் சவுண்ட் கார்ட் பெயர் உள்ளதா எனத் தேடவும். உங்கள் மாடலுக்கேற்றபடி, கிரியேட்டிவ் லேப்ஸ் அல்லத் இன்டெல் (Creative Labs, Intel) அல்லது வேறு ஒரு நிறுவனத்தின் ஹார்ட் வேர் சாதனங்கள் பட்டியலிடப்பட்டு அதில் இதுஇருக்கும். இங்கு Driver என்ற டேப்பில் கிளிக் செய்து, பின்னர் Update Driver என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் சிஸ்டம் இந்த புதிய ட்ரைவர் பதிப்பினை இன்ஸ்டால் செய்திடவா? என்று கேட்கும். சரி என ஒப்புதல் கொடுத்தால், ட்ரைவர் சாப்ட்வேர் அப்டேட் ஆகி, இயங்கத் தொடங்கும்.

அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், குறிப்பிட்ட நிறுவனத்தின் இணைய தளம் சென்று வாடிக்கையாளர்களுக்கு சப்போர்ட் தரும் பிரிவில் தேடவும். அங்கு, நிச்சயமாக சவுண்ட் கார்டுக்கான ட்ரைவர் சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்ட நிலையில் புதியதாகக் கிடைக்கும். அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். அல்லது, தளத்திலேயே, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வசதி இருப்பின், அதனைக் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்னொரு வழியும் உள்ளது. ஏற்கனவே உள்ள ட்ரைவரை அன் இன்ஸ்டால் செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்தினையே, அதற்கான ட்ரைவர் சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்கலாம். இதற்கு Device Manager பாக்ஸ் செல்லவும். ஆடியோ ட்ரைவர் என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். அருகே உள்ள Uninstall என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவும். விண்டோஸ் மீண்டும் இயங்கும்போது, உங்கள் ஆடியோவிற்கான ட்ரைவரை இயக்கும்.

விண்டோஸ் இயக்கத்தில், இது போல ஆடியோ ட்ரைவர்கள் தங்கள் செயல் இழப்பது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். அதனால் தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத் தளங்களில், இது குறித்த தகவல்களையும், எப்படி தவறுகளை சீர் செய்வது என்றும் அறிவித்துள்ளது. அந்த தளங்களின் முகவரிகள் இதோ:
http://windows.microsoft.com/en-us/windows-10/fix-sound-problems#v1h=tab01

விடியோ விளக்கவுரை பெற: https://www.youtube.com/watch?v=7eCy-K5zlw4&list=PLWs4_NfqMtozP_oATmM8FTMhsAPtn3m_F&index=3

சிக்கல்கள் தீர்க்கும் வழிகளைப் பெற: http://windows.microsoft.com/en-us/windows-10/fix-sound-problems#v1h=tab03

விண்டோஸ் இயக்கத்தின் பொதுவான சப்போர்ட் பெற: http://windows.microsoft.com/en-us/windows/support#1TC=windows-10


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல