செவ்வாய், 3 நவம்பர், 2015

எப்படி இருந்தது இணையம்?

இணையம் எப்படி வளர்ந்தது? என்று அறிந்தீர்கள் என்றால் அதன் வளர்ச்சி நமக்கு வேடிக்கையாக இருக்கும்? தொடக்கத்தில் மக்கள் எதிர்பார்த்தைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ந்த ஒன்று தான் இன்றைய இணையம். இதன் வளர்ச்சியை ஆண்டுகள் வாரியாகப் பிரித்து, அவ்வப்போது நடந்தவற்றை, அதற்குக் காரணமானவர்களின் போட்டோக்களுடன் அழகாகத் தொகுத்து, இந்த தளத்தில் பதிந்துள்ளனர். அதனை இணையத்தின் கதை என்ற தலைப்பிலேயே Story of the Web என்ற பெயரில் இணைய தளம் ஒன்றை ஏற்படுத்தி பதிந்து வைத்துள்ளனர்.


இதன் இணைய தள முகவரி: http://storyoftheweb.org.uk/

”இப்படி எல்லாம் செய்திட முடியும் என்று எண்ணியது கூட இல்லையே” என்று முதலில் இணையத்தைப் பார்த்தவர்கள் சொல்லி இருப்பார்கள். இப்போதோ, ”இணையம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்பவர்களே அதிகம்.

ஏன், அப்படிச் சொன்னால்தான், நம்மை இப்போதைய உலகின் மனிதர்களாக நம்மை மதிக்கிறார்கள். 19 கோடிக்கு மேலான இணைய தளங்கள் இன்று உள்ளன. தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை இந்த இணைய தளம் காட்டுகிறது.

இதில் நுழைந்தவுடன், இதனைக் காண இரு வழிகள் இருந்தன. இதில் உள்ள Auto Play என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அது தானாகவே, படிப்படியாகப் படங்களுடன், இணையத்தின் வளர்ச்சியை, அதன் சிறப்பான பயணத்தினைக் காட்டுகிறது. இன்னொரு வழியாக, நீங்களே உங்களின் கட்டுப்பாட்டில் இதனை இயக்கிக் காணலாம். நான் ஆட்டோ ப்ளே இயக்கினேன். 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏற்பட்ட மாற்றங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் படங்கள், ஏற்பட்ட மாற்றங்கள் என அனைத்தும் அழகாகத் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.

நாம் இணையம் பயன்படுத்தத் தொடங்கிய அந்த நாட்களை நாம் எண்ணி அசைபோடும் வகையில், பல காட்சிகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன. 2014 வரை ஏற்பட்ட மாற்றங்கள் காட்டப்படுகின்றன. இறுதியில், 20-15ல் என்ன நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் முடிகிறது. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இணைய தளம் இது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல