செவ்வாய், 3 நவம்பர், 2015

கூகுள் தளத்தில் உங்களின் தேடல்...

கூகுள் தளத்தில் நம் தேடல்கள் எல்லாம் பதிந்து வைக்கப்படுகிறது, அவை அனைத்தையும் தனியே நாம் பெற முடியும், அழிக்க முடியும் மற்றும் நகலெடுத்து வைக்க முடியும்



கூகுள் நம் தேடல்களை எல்லாம் தனியே ஒரு தளத்தில் பதிந்து வைக்கிறது. இது நமக்கு உதவிடத்தான் என்றாலும் சில சிக்கல்கள் இதனால் ஏற்படலாம். நீங்கள் ஒரு மாதம் முன்பு ஒன்றைத் தேடி அறிந்தீர்கள். அதனை இப்போது உடனே காண வேண்டும் என எண்ணினால், முயன்று கூகுள் தளத்திலேயே இதனைப் பெறலாம். நம் தேடல்கள் அனைத்தையும் கூகுள் பட்டியலாகத் தருகிறது.

முதலில் கூகுள் அக்கவுண்ட் ஒன்றில் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உங்களைப் பதிந்து கொள்ளுங்கள்.

ஜிமெயில் தளத்தில் கூட நுழையலாம்.

பின்னர் இந்த தொகுப்பினைப் பெற முதலில் https://history.google.com/ என்ற தளம் செல்லவும்.

இங்கு நீங்கள் அந்த வாரத்தில் மேற்கொண்ட தேடல்களின் அடிப்படையில் ஒரு சார்ட் கிடைக்கும்.

எத்தனை தேடல்களை மேற்கொண்டீர்கள் என்ற விபரம் கிடைக்கும்.

அப்படியே கர்சரைக் கீழாகக் கொண்டு சென்றால், தேடல்கள் அனைத்தும், அவற்றிற்கான இணையப் பக்க சிறிய படத்துடன் காட்டப்படும்.

இவற்றைத் தனியே நீங்கள் தரவிறக்கம் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

இதில், நீங்கள் தேடிய தேடல்கள் மற்றவர்களால் அறியப்படக் கூடாது என்று எண்ணினால், தரவிறக்கம் செய்வதனை இரகசியமாக சேவ் செய்திட வேண்டும்.

இல்லை என்றால், அவற்றை இந்த தளத்திலிருந்து அழித்துவிட்டு, தரவிறக்கம் செய்திடலாம்.

மேலே சொன்ன தளத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் கியர் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும்.

அங்கு காட்டப்படும் கீழ்விரி மெனுவில், "Download" என்பதில் கிளிக் செய்தால், உங்களின் தேடல்கள் அனைத்தும், அவை சேர்த்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தரப்படத் தயாராய் இருக்கும். இருப்பினும், உங்களுக்கு எச்சரிக்கை ஒன்று தரப்படும்.

உங்கள் தேடல்களில், மற்றவர்கள் அறியக் கூடாத தேடல்கள் சில இருக்கலாம். மற்றவர்களுக்குக் காட்டப்படாமல் இருக்க வேண்டிய தளங்கள் இருக்கலாம்.

எனவே, எப்படி எச்சரிக்கையாக, இதனைக் காப்பாற்றி வைக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு, மொத்த தேடல் தொகுப்பினையும் பெறுவதற்கான லிங்க் உங்களுக்கு ஜிமெயிலில் அனுப்பி வைக்கப்படும். அல்லது வேறு யாரும் இதனைத் தரவிறக்கம் செய்திடாமல் இருக்க, இரு வழிப் பாதுகாப்பினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளும். மொத்த தேடல் தளங்கள் பட்டியலும், சுருக்கப்பட்ட பைலாகத் தரப்படும்.

அவரவர் தேடல்களை மட்டுமே பெற முடியும். மற்றவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் தெரிந்தால், இதே முறையில் பெறலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல