செவ்வாய், 3 நவம்பர், 2015

வேர்ட் டாகுமெண்ட்டில்.....

வேர்ட் டாகுமெண்ட்டில், சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில், வேறு சொற்களை அமைத்திட Find and Replace வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சொல்லைத் தேடி, அந்த இடத்தில் இன்னொரு சொல்லை அமைக்கும்படி இதனைப் பயன்படுத்துகையில், சொல் தேடி இடம் காட்டுகிறது.



அதில் Replace செய்திட எண்டர் தட்டியவுடன், அடுத்து அந்த சொல் இருக்குமிடம் கர்சர் சென்று நிற்கிறது.

முந்தைய சொல் இருந்த இடத்தில், நாம் அமைத்த சொல் அமைக்கப்பட்டுவிட்டதா என அறிந்து கொள்ள Find and Replace கட்டத்தில் வசதி இல்லை. ஆனால், இதற்குச் சற்று சுற்று வழியில் செயல்பட்டு, நம் சந்தேகத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

நாமே சொல் உள்ள இடத்தில், புதிய சொல்லை அமைக்கலாம்.

1. ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடவும்.

2. பின்னர், கண்ட்ரோல் + எப் கீகளை அழுத்தி, நாம் தேடும் சொல்லுக்கு இணையாக சொல் உள்ள இடத்தைக் கண்டறியவும். இப்போது எஸ்கேப் கீயை அழுத்தினால், பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸ் மூடப்படும். இருப்பினும், நாம் தேடி அறியப்பட வேண்டிய சொல்லில், கர்சர் நிற்கும்.

3. இப்போது கண்ட்ரோல்+ வி கீகளை அழுத்தினால், கிளிப் போர்டில் உள்ள ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும்.

4. அடுத்து Object Browser இல், நெக்ஸ்ட் அம்புக்குறி அல்லது கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், தேடும் சொல் இருக்கும் இட த்தில் கர்சர் நிற்கும். இனி மேலே 2 மற்றும் 3ல் காட்டப்பட்டுள்ள செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல