செவ்வாய், 3 நவம்பர், 2015

வேர்ட் டிப்ஸ்.... இன்ஸெர்ட் கீயால் டெக்ஸ்ட் ஒட்டலாம், டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த

இன்ஸெர்ட் கீயால் டெக்ஸ்ட் ஒட்டலாம்:

முதன் முதலில் வேர்ட் செயலியை இன்ஸ்டால் செய்கையில், இன்ஸெர்ட் கீ, நாம் டெக்ஸ்ட்டினை, இருக்கும் டெக்ஸ்ட்டிற்கு மேலாக டைப் செய்திடவும், தேவை இல்லை எனில், இந்த வசதியை நிறுத்தவும் என்ற வகையில் மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. ஆனால், மற்ற சில வேர்ட் புரோகிராம்களில், இந்த இன்ஸெர்ட் கீயானது, நாம் காப்பி செய்து, கிளிப் போர்டில் தேக்கி வைத்திருக்கும், டெக்ஸ்ட் மற்றும் படங்களை ஒட்ட பயன்படுத்தப்படுகிறது. சில வேர்ட் ப்ராசசர்களில், டெலீட் கீ டெக்ஸ்ட்டினை அழிக்கவும், இன்ஸெர்ட் கீ, அப்போது கர்சர் உள்ள நிலையில், டெக்ஸ்ட்டினை ஒட்டவும் பயன்படுகின்றன. இதனால், வேர்ட் செயலியுடன், மற்ற வேர்ட் செயலிகளிலும் பணியாற்றுவோர், இன்ஸெர்ட் கீ செயல்பாட்டில் தடுமாறுகின்றனர்.



ஆனால், நாம் விரும்பினால், வேர்ட் செயலியிலும், இன்ஸெர்ட் கீயினை இதே போல, டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட் ஒட்ட (Ctrl+V ) செயல்பாட்டிற்கு மாற்றி அமைக்கலாம். அவ்வாறு அமைத்து, நாம் கிளிப் போர்டில் தேக்கி வைத்துள்ளவற்றை ஒட்ட பயன்படுத்தலாம். இதற்குக் கீழே காட்டியுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

1. ஆபீஸ் பட்டன் அழுத்தி, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பனில் File டேப்பினை அழுத்தி, பின்னர் Options கிளிக் செய்திடவும்.

2. டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் Advanced என்றிருப்பதில், கிளிக் செய்திடவும்.

3. பின்னர் கீழாகச் சென்று, Cut, Copy, and Paste பிரிவைக் காணவும்.

4. இதில் உள்ள Use the Insert Key for Paste என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.

5. அடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த:

வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.

4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.

தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல