செவ்வாய், 3 நவம்பர், 2015

நூல்களுக்கான இணைய தளம்

அமெரிக்காவில் இயங்கும் பென்சில்வேனியா பல்கலைக் கழகம், இணையத்தில் மிகவும் ஆச்சரியத்தக்க வகையில், நூல்களின் பொக்கிஷம் ஒன்றை வழங்கி வருகிறது. ஏறத்தாழ, 20 லட்சம் நூல்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கின்றன.



இந்த தளத்தின் முகவரி: http://digital.library.upenn.edu/books/

இந்த தளத்தில் நுழைந்தவுடன், Books Online என்ற பிரிவிற்கு நீங்கள் செல்வீர்கள். அங்கு நூல்களைத் தேடிப் பெறுவதற்கான தேடல் கட்டம், புதியதாகப் பட்டியலிடப்பட்டுள்ளவை, நூல் ஆசிரியர்கள் பெயர்கள், நூல்களின் தலைப்பு, நூல்கள் கையாளும் பொருள் எனப் பல பிரிவுகளில் தேடும் வசதி ஆகியவை கிடைக்கின்றன.

இவற்றுக்குக் கீழாக News என்று ஒரு பிரிவு உள்ளது. இந்த பிரிவிலும், புதியதாக இணைக்கப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் தரப்படுகிறது.

Archives and Indexes என்ற பிரிவில், நாம் தேடும் நூல் சார்ந்த மற்ற நூல்களின் பட்டியல் மற்றும் அவற்றிலிருந்து டெக்ஸ்ட் மாதிரி கிடைக்கிறது. இறுதியாக உள்ள The Inside Story என்ற பிரிவு இந்த தளம் குறித்த கூடுதல் தகவல்கள், அடிக்கடி இத்தளம் பற்றி கேட்கப்படும் கேள்விகள், எப்படி ஒரு நூலைக் கண்டுபிடிக்கலாம் என்பதற்கான வழிமுறைகள் ஆகியவை தரப்படுகின்றன.

இங்கு கிடைக்கும் இந்த இலவச நூல்கள் மாணவர்களுக்கு அதிகம் பயன்படும். ஆங்கில இலக்கிய நூல்கள் அதிகம் கிடைக்கின்றன.

தமிழ் நூல்கள் இதில் இடம் பெற வில்லை. தமிழ் இலக்கியம் குறித்தும் எதுவும் தேடியதில் கிடைக்கவில்லை. ஆனால், இந்தியாவின் தத்துவ நூல்கள் பல கிடைக்கின்றன. ஒருமுறை சென்று தேடிப் பாருங்களேன்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல