செவ்வாய், 3 நவம்பர், 2015

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குள்ளே நுழைந்திடும் வழி

விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, ஒரு முழுமையான பன்னாட்டளவிலான சிஸ்டமாக மைக்ரோசாப்ட் கொண்டு வந்துள்ளது. அதாவது, இதனைச் சார்ந்த மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலமாக, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திட வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதன் மூலம், நீங்கள் மைக்ரோசாப்ட் தரும் பல வசதிகளை அனுபவிக்க முடியும். இதில் சிலவற்றை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் புதியதாக அமைக்க வேண்டும்.



விண்டோஸ் 10 சிஸ்டம், உங்களின் லோக்கல் அக்கவுண்ட் பயன்படுத்துவதற்கான வழியையும் தருகிறது. இதனை செட் அப் செய்வதும் எளிது. இருப்பினும், நீங்கள் விண்டோஸ் ஸ்டோர், ஒன் ட்ரைவ் பைல்களை ஒருங்கிணைப்பது போன்றவற்றிற்கு, உங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டினைத்தான் பயன்படுத்த வேண்டும்.

இனி, லோக்கல் அக்கவுண்ட் ஒன்றை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.

1. முதலில் Settings > Account > Your account எனச் செல்லவும்.

2. Sign in with a local account instead என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

3. இப்போது பாப் அப் விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டினை சோதனை செய்திட, அதற்கான பாஸ்வேர்ட் கேட்கப்படும். பாஸ்வேர்டை டைப் செய்து அடுத்து Next. என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இங்கு உங்களுடைய லோக்கல் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும். உங்களுடைய யூசர் நேம், பாஸ்வேர்ட், பாஸ்வேர்ட் மறந்து போனால், பெறுவதற்கான கேள்வி பதில் ஆகியவற்றைத் தர வேண்டும். அடுத்து Next கிளிக் செய்திடவும்.

5. அடுத்து Sign out and finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் உங்களுடைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டிலிருந்து லாக் ஆப் செய்யப்படுவீர்கள். பின்னர், உங்களுடைய லோக்கல் அக்கவுண்ட் மூலம், புதிய பாஸ்வேர்ட், யூசர் நேம் பயன்படுத்தி லாக் இன் செய்திடலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல