செவ்வாய், 3 நவம்பர், 2015

வேர்ட் டிப்ஸ்... அட்டவணை நெட்டு வரிசை கூட்டல், அட்டவணை நெட்டு வரிசை அகலம்

அட்டவணை நெட்டு வரிசை கூட்டல்: வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் அமைக்கும் டேபிள்களில் உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளை, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கூட்டிப் பார்ப்பது போன்ற வசதியை வேர்ட் புரோகிராம் நமக்குத் தருகிறது. எடுத்துக் காட்டாக, 20 படுக்கை வரிசைகள் கொண்ட ஒரு டேபிளை அமைத்துள்ளோம் என்று கொள்வோம். இதில், மூன்றாவதாக உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையினை அறிய நாம் விரும்புகிறோம். கீழ்க்கண்டவாறு இதற்கு செயல்பட வேண்டும்.


1. எந்த நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையினை அறிய வேண்டுமோ, (இங்கு மூன்றாவதாக உள்ள நெட்டு வரிசை) அதில் கீழாக உள்ள செல்லில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.

2. ரிப்பனில், Layout டேப்பினைக் காணவும்.

3. இங்கு டேட்டா குரூப்பில் உள்ள Formula டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. வேர்ட் Formula டயலாக் பாக்ஸைக் காட்டும்.

5. இங்கு Number Format என்னும் கீழ் விரி பட்டியலில், Number Format என்பதனைப் பயன்படுத்தி, எண் மதிப்பு எந்த பார்மட்டில் தேவை என்பதனை தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. பார்மட் தேர்ந்தெடுக்காமலும் இருக்கலாம்.

6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

7. கூட்டுத் தொகை இறுதி செல்லில் அமைக்கப்பட்ட பின்னர், மேலுள்ள செல்களில் மதிப்பினை மாற்றினாலும், படுக்கை வரிசைகளை நீக்கினாலும், ஒவ்வொரு முறையும் கூட்டு மதிப்பினை உருவாக்க வேண்டும். இதற்கு, அந்த இறுதி செல்லில், கர்சரைக் கொண்டு சென்று, ஏற்கனவே இருக்கும் கூட்டுத் தொகையை நீக்கிய பின்னர், F9 கீயை அழுத்த வேண்டும்.

அட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.

5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.

6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.

8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல