செவ்வாய், 3 நவம்பர், 2015

எக்ஸெல் டிப்ஸ்... ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க, டேட்டாவின் கீழே கோடு, அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?

ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.



1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் கிடைப்பவற்றில், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 தொகுப்பில், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து அதில் Options என்பதனைக் கிளிக் செய்திடுக.

2. டயலாக் பாக்ஸில், இடது பக்கம், Popular (Excel 2007) அல்லது General (Excel 2010) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுக.

இங்கு கிடைக்கும் ScreenTip Style கீழ்விரி பட்டியலைத் திறந்திடுக. இங்கு Don't Show ScreenTips என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கொடுத்து வெளியேறவும். இனி ஸ்கிரீன் டிப்ஸ் தோன்றாது.

டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.

அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?: பழைய எக்ஸெல் ஒர்க் ஷீட்களுடன் பணியாற்றுகையில், அல்லது நாம் பழகாத இடங்களிலிருந்து கிடைக்கும் ஒர்க் ஷீட்களில் மீண்டும் பணியாற்றுகையில், அதில் உள்ள அலகுகளை, புதிய அலகுகளுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அடிக்கணக்கில் உள்ளதை மீட்டருக்கு மாற்றலாம். காலன் என்பதை லிட்டர் என மாற்ற வேண்டியதிருக்கலாம். இதற்கான பார்முலாவினை இங்கு காணலாம்.

எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் மாற்றலாம். இந்த பங்சனை அமைக்கையில் நீங்கள் பார்முலா எதனையும் அறிந்திருக்கத் தேவையில்லை.

எடுத்துக்காட்டாக Column B-யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column C யில் கொண்டு வர ஆசைப்படுகிறீர்கள். இனி Column B-யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் B2:B8 வரையிலான செல்களைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து C2:C8 தேர்ந்தெடுங்கள். இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும்.

அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். இவ்வகைக் கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல்- கி.மீ, காலன் - லிட்டர் என பல கிடைக்கின்றன. பாரன்ஹீட் - செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் - பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”)
என அமையும்.

எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப்பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் தொகுப்பு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், Analysis ToolPak -னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல