வேர்ட் புரோகிராமில், அதில் ஏற்படுத்தும் டாகுமெண்ட்களுக்கு, பின்னணியில் நிறம் அமைத்திடும் வழிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இணைய தளங்களில் டாகுமெண்ட்களைப் பக்கங்களாக அமைப்பவர்கள் இந்த பின்புல வண்ணப் பின்னணியைப் பயன்படுத்துவார்கள். வேர்டில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி, கண்களுக்கு உறுத்தாத வகையில், மென்மையான வண்ணத்தைக் கொடுப்பது உங்கள் கற்பனைத் திறனில் தான் உள்ளது. பின்புல வண்ணம் அமைக்கும் வழிகளைக் கீழே தருகிறேன்.
1. ரிப்பனில் பேஜ் லே அவுட் டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
2. இங்கு Page Background குரூப்பில், Page Color என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் வண்ணங்கள் நிறைந்த ஒரு கட்டத்தை உங்களுக்குக் காட்டும். இதிலேயே, கூடுதல் வண்ணங்கள் பெறவும் வழிகள் இருக்கும்.
3. உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வண்ணம், டாகுமெண்ட்டிற்கு பின்புல வண்ணமாக, படிப்பதற்கு இடையூறு இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும்.
நீங்கள் மவுஸ் கர்சரை வண்ணங்களுக்கான கட்டங்களில் செல்லும்போதே, டாகுமெண்ட் பின்புறம் இந்த வண்ணங்கள் அமைக்கப்பட்டுக் காட்டப்படும்.
சரியானது என நீங்கள் முடிவு செய்தால், அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த வண்ணத்தினை நீக்க வேண்டும் என முடிவு செய்தால், மேலே காட்டியுள்ளபடி சென்று “No color” என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக