திங்கள், 22 நவம்பர், 2010

எல்.ரீ.ரீ.ஈ. யின் புதிய தலைவர் விநாயகம் விடயத்தில் குளறுபடி ???

எல்.ரீ.ரீ.ஈ. யின் புதிய தலைவர் விநாயகம் பாசாங்குகாரராக அம்பலம்

(டி.பி.எஸ். ஜெயராஜ்)


ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் புதிய தலைவர் ஆள்மாறாட்டக்காரர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

ஐரோப்பாவில் வாழ்கின்ற சிரேஷ்ட புலித் தலைவர் ஒருவர் தான் கடற்புலிகளின் தளபதி கேணல் விநாயகம் எனக் கூறியது பொய்யென தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜோர்தான் ஆட்ச்சேர்ப்பு முகவர் நிலையம் மறுப்பு

இலங்கை வீட்டுப் பணிப்பெண் வதைக்கப்பட்டதாக கூறப்படும் அறிக்கையினை ஜோர்தான் ஆட்ச்சேர்ப்பு முகவர் நிலையம் மறுத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.பல்கலைக்கழக விடுதியில் தங்கியி ருந்த கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் நேற்றிரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதிகளவான குளிசைகளைப் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இம் மாணவன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்கோஸ் தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு கைமாறியது

அவுஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது.

ஆணுறைக்கு ஆதரவாக போப்பாண்டவர் கருத்து

ஆணுறைகளின் பயன்பாட்டுக்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன். இது ஐ.நா, ஐரோப்பிய நாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரக் குழுக்களின் கண்டனத்தை சம்பாதித்தது.

பேஸ்புக்கில் எழுதி அழித்த நடிகை

'விவாகரத்து கிடைத்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்', என்று தனது ஆசையை பேஸ்புக்கில் தெரிவித்த நடிகை மனீஷா கொய்ராலா, அடுத்த சில நிமிடங்களில் அதை அழித்துவிட்டார்.

நடிகை மம்தா மோகன்தாசுக்கு கேன்சர்!

சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ். பிறந்த வருடத்தைக் கூட மறைக்கும் இந்த கால நடிகைகள் மத்தியில் மம்தா ரொம்பவே வித்தியாசமானவர் என்பதை தனது பேட்டியின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

உலகின் உயரமான தம்பதியர் (படங்கள் இணைப்பு)

உலகில் தற்போது வாழும் தம்பதியரில் உயரமான தம்பதியர் என்ற பெருமையை கலிபோர்னியாவின் ஹால்குயிஸ்ட், லாவ்ரி தம்பதியர் பெற்றுள்ளனர். இவர்களின் இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் ஸ்டாக்டன் நகரில் வசிப்பவர் ஹால் குயிஸ்ட் (57). இவரது உயரம் 6 அடி 10 அங்குலம். இவரது மனைவி லாவ்ரியின் உயரம் 6 அடி 5.95 அங்குலம்.

15 வயது மாணவர்களுடன் செக்ஸ் உறவு வைத்த இந்திய ஆசிரியைக்கு 16 மாத சிறை

இங்கிலாந்து நாட்டில் மெர்சிசைடு மாநிலத்தில் உள்ள சவுத்போர்ட் என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்தவர் ஹினா பட்டேல். 37 வயதான இந்தியரான இவர் தன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவரது குழந்தைகள் அவரது முன்னாள் கணவருடன் அவர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

இந்திய அமெரிக்க நிருபர் நியூஜேர்சி தமிழ் அமைப்புக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்: அழைப்பு விடுத்துவிட்டு பலவந்தமாக அனுப்பியதாக புகார்

இந்திய அமெரிக்கப் பத்திரிகையாளரான டாக்டர் பிரகாஷ் எம்.சுவாமி நியூஜேர்சியில் இடம்பெற்ற புலிகளுக்கு சார்பான கூட்டமொன்றிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல