திங்கள், 22 நவம்பர், 2010

ஜோர்தான் ஆட்ச்சேர்ப்பு முகவர் நிலையம் மறுப்பு

இலங்கை வீட்டுப் பணிப்பெண் வதைக்கப்பட்டதாக கூறப்படும் அறிக்கையினை ஜோர்தான் ஆட்ச்சேர்ப்பு முகவர் நிலையம் மறுத்துள்ளது.

இலங்கை வீட்டுப் பணிப்பெண்னை கட்டாயப்படுத்தி ஜோர்தான் வேலை வழங்குனர் ஊசிகளை விழுங்க வைத்தார் என கடந்த வாரம் நியூயோர்க்கைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்திருந்து.

குறித்த பெண்ணிற்கு வாழைப்பழங்களில் 6 ஊசிகளை ஏற்றி ஜோர்தான் நாட்டு வேலைவழங்குனர் கட்டாயப்படுத்தி பழங்களை உண்ண வைத்ததாக குறித்த பெண் கையொப்பமிட்டு இரு கடுதங்களை தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக அல் ஹப்னாபி முகவர் நிலைய அதிகாரி தீப் அல் ஹப்னாபி தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தப்பிச் செல்வதற்காக முதற் கிழமை தனது முகத்தில் கண்காடிகளை சுத்தம் செய்யும் திரவத்தை ஊற்றிக் கொண்டதாகவும், அது பயனளிக்காது போகவே வேறு பல உச்சகட்ட முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் முகவர் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பெண் கணவரை இழந்ததினாலேயே மன்னிப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் என ஏபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல