திங்கள், 22 நவம்பர், 2010

எல்.ரீ.ரீ.ஈ. யின் புதிய தலைவர் விநாயகம் விடயத்தில் குளறுபடி ???

எல்.ரீ.ரீ.ஈ. யின் புதிய தலைவர் விநாயகம் பாசாங்குகாரராக அம்பலம்

(டி.பி.எஸ். ஜெயராஜ்)


ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் புதிய தலைவர் ஆள்மாறாட்டக்காரர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

ஐரோப்பாவில் வாழ்கின்ற சிரேஷ்ட புலித் தலைவர் ஒருவர் தான் கடற்புலிகளின் தளபதி கேணல் விநாயகம் எனக் கூறியது பொய்யென தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பாவில் புலிகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள விநாயகம், நன்கு பிரபலமான கடற்புலி பிரதி தலைவரும் ஒரு காலத்தில் கடற்புலிகளின் தலைமையில் சூசை, செழியன் ஆகியோருக்கு அடுத்த நிலையில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான கடற்புலிகளின் பிரதித்தளபதி அல்ல.

கடற்புலி தலைவர் விநாயகம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சாளையில் நடந்த சண்டையில் பெப்ரவரி 04, 2009இல் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஐரோப்பாவில் தோன்றிய இந்நபர் அதை மறுத்துரைத்து தன்னை இறந்ததாக அறிவிக்கப்பட்ட 'விநாயகமென' காட்டிக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் முன், புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மானினால் தனக்கு ஒரு விசேட பொறுப்பு தரப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பிவைத்ததாகவும், தான் சண்டையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது உண்மையில்லை எனவும் ஐரோப்பாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. வட்டாரங்களுக்கு விநாயகம் கூறினார்.

விநாயகம், தான் முதலில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு சென்று பின் ஐரோப்பாவிற்கு சென்றதாக கூறியதை எல்.ரீ.ரீ.ஈ. வட்டாரங்கள் நம்பின. இவர்கள் விநாயகத்தின் 'உயிர்த்தெழுகை' யை தனித்துவமாக சாதனையாக பாராட்டினர்.

இறந்ததாக கூறப்பட்ட  சிரேஷ்ட புலித்தலைவர் ஒருவர் உயிர் மீண்டு வந்தமை, உலக தமிழ் புலம் பெயர்ந்தோரிடையே காணப்பட்ட, எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள், செயற்படுநர்கள் ஆகியோருக்கு உளவியல் ரீதியாக பெரும் உற்சாகத்தை கொடுப்பதாக காணப்பட்டது.

புலிகளின் வெளிநாட்டு கிளைகளின் ஒட்டுமொத்த பொறுப்பையும் வைத்திருந்த, புலி இயக்கத்தை புதுப்பிக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டிருந்த நெடியவனுடன் விநாயகம் ஒரு தந்திரோபாய கூட்டை ஏற்படுத்தினார். புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் என்ற வகையில் விநாயகத்தின் பாத்திரத்தை, நான் டெய்லிமிரருக்காக நவம்பர் 13இல் எழுதிய  பத்தியில் விரிவாக கூறியிருந்தேன்.

ஆயினும் புதிதாக கிடைத்த தகவல்கள் இந்த விநாயகம், கடற்புலி தலைவர் விநாயகம் அல்ல என அம்பலமாக்கியுள்ளன.

இந்த ஆள்மாறாட்டக்காரரின் இயக்கப்பெயரும் விநாயகம்தான். இவர் பொட்டு அம்மானின் உளவுப்பிரிவில் இருந்தவர். இவர் சூசையினால் தலைமை தாங்கப்பட்ட கடற்புலிகளில் இருக்கவில்லை.

கடற்புலி பிரதி தளபதி விநாயகத்தின் இடதுகண் பாதிக்கபட்டு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருந்தது. ஆனால் 'மற்ற' விநாயகத்தின் இரண்டு கண்களும் நன்றாகவே உள்ளன. இந்த பத்தி எழுத்தாளருக்கு கிடைத்த தகவலின்படி முன்னாள் கடற்புலித் தலைவரின் முழுப்பெயர் தங்கவேலு விநாயகம் ஆகும். இவரின் தொடர்பாடலுக்கான இரகசிய குறியீட்டு பெயர் 'மைக் ஃபோர்' என்பதாகும்.

கடற்புலி தலைவராக பாசாங்கு பண்ணிக்கொண்டிருக்கும் சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. உளவுப்பிரிவு செயற்படுநரின் முழுப்பெயர் சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தியாகும். இவர் கதிர்காமத்தம்பி அறிவழகன் என்னும் பெயரையும் பயன்படுத்துவார்.

இரண்டு பேருமே எல்.ரீ.ரீ.ஈ.யில் விநாயகம் என அறியப்பட்டனர் (இருவரின் படங்களும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளன).

உளவுத்துறையை சேர்ந்த விநாயகம், கடற்புலித் தலைவர் விநாயகம் போல பாசாங்கு பண்ணும் இந்த நிலைமைக்கு இட்டுச்சென்ற தொடர் சம்பவங்கள் பற்றியும், இந்த ஆள்மாறாட்டத்துக்கான காரணங்கள் பற்றியும் எனது அடுத்த பத்தியில் ( நவம்பர் 27, 2010 டெய்லிமிரர்) அம்பலப்படுத்தப்படும்.


டெய்லிமிரர்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல