திங்கள், 22 நவம்பர், 2010

நடிகை மம்தா மோகன்தாசுக்கு கேன்சர்!

சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ். பிறந்த வருடத்தைக் கூட மறைக்கும் இந்த கால நடிகைகள் மத்தியில் மம்தா ரொம்பவே வித்தியாசமானவர் என்பதை தனது பேட்டியின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

ஆம்! மம்தாவுக்கு கேன்சர் என்ற செய்தி அவர் மூலமாகவே கசிந்து கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதுதொடர்பாக மம்தா அளித்துள்ள பேட்டியில், எனக்கு புற்றுநோய் இருக்கிறது. ‌நோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டேன்.

 இப்போது அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் நடித்திருக்கும் அன்வர் படத்தில் புதுமாதிரியான ஹேர் ஸ்டைலுடன் இருப்பேன். உண்மையிலேயே அது ஸ்டைல் இல்லை. கேன்சர் சிகிச்சைக்காக முடியை வெட்ட வேண்டியதாயிற்று. எனவே அதையே ஸ்டைல் ஆக்கி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

அவர் தனது பேட்டியில் முன்னணி டைரக்டர் ஒருவரையும் கடுமையாக சாடியிருக்கிறார். அவர் தனது பேட்டியில், எனக்கு கேன்சர் வந்ததில் கூட கவலை இல்லை. ஆனால் அதை‌ மனிதர்கள் பார்க்கும் விதம்தான் வருத்தமாக இருக்கிறது. ஜெயம் ரவி ஜோடியாக, அமீர் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. எனக்கு இந்த நோய் என்று கேள்விப்பட்டதும் அமீர் என்னை படத்தில் இருந்து தூக்கி விட்டார். உன்னால் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டார். எனக்கு பதில் நீத்து சந்திராவை சேர்த்திருக்கிறார்கள். கேன்சர் வந்தால் நடிக்க முடியாது என்பது அபத்தம். டாக்டர்களிடம் கூட அமீரை பேசச் சொன்னேன். அவர் மறுத்து விட்டார், என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

தற்போது மம்தா பிருத்விராஜ் தயாரிக்கும் இசை ஆல்பத்தில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறாராம். அந்த ஆல்பத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போகும் அவர், 4 மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வாய்ப்புகள் இல்லாதது பற்றி எனக்கு கவலையில்லை. நல்ல வாய்ப்புகள் வரும் போது நிச்சயம் தமிழில் நடிப்பேன். அதுவரை மலையாள சினிமாவில்தான் இருப்பேன், என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் மம்தா.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல