திங்கள், 22 நவம்பர், 2010

15 வயது மாணவர்களுடன் செக்ஸ் உறவு வைத்த இந்திய ஆசிரியைக்கு 16 மாத சிறை

இங்கிலாந்து நாட்டில் மெர்சிசைடு மாநிலத்தில் உள்ள சவுத்போர்ட் என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்தவர் ஹினா பட்டேல். 37 வயதான இந்தியரான இவர் தன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவரது குழந்தைகள் அவரது முன்னாள் கணவருடன் அவர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

இவர் தன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 15 வயது மாணவர்கள் 2 பேரிடம் தன் வீட்டில் வெது வெதுப்பான படுக்கை இருப்பதாகவும் அதில் படுத்தால் சுகமாக தூக்கம் வரும் என்றும் கூறி அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார். தன் படுக்கை அறையில் அவர்களை தூங்கச்சொல்லிய பிறகு அவர்களுடன் அவர் உறவு வைத்து கொண்டு இருக்கிறார்.

அவர்களில் ஒரு மாணவன் கூறும் போது, பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதே தனக்கு ஹிமா படேல் எஸ்.எம்.எஸ் அனுப்பினார் என்றும் தெரிவித்தான். இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு16 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல