திங்கள், 22 நவம்பர், 2010

இந்திய அமெரிக்க நிருபர் நியூஜேர்சி தமிழ் அமைப்புக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்: அழைப்பு விடுத்துவிட்டு பலவந்தமாக அனுப்பியதாக புகார்

இந்திய அமெரிக்கப் பத்திரிகையாளரான டாக்டர் பிரகாஷ் எம்.சுவாமி நியூஜேர்சியில் இடம்பெற்ற புலிகளுக்கு சார்பான கூட்டமொன்றிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்திய அரசினதும் இலங்கையினதும் முகவர் என்று அவரைக் குறிப்பிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள் கூட்டத்திலிருந்தும் அவரை வெளியேற்றியுள்ளனர்.நியூயோர்க்கிலுள்ள சிரேஷ்ட செய்தியாளரான பிரகாஷ் சுவாமி ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற நிருபராகும். நியூஜேர்சியில் இடம்பெற்ற கூட்ட நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கு சுவாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் அங்கு சென்றிருந்த நிலையில் அவரைப் பலவந்தமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தமிழர்கள் சங்கமும் இலங்கைத் தமிழ் சங்கமும் இந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கத்தினதும் இலங்கையினதும்"ஏஜன்ட்'(முகவர்) என்று அவர்கள் அவரை சிந்தித்ததுடன் பலவந்தமாக கதவுக்கு வெளியே தள்ளிவிட்டதாகவும் வெளியே கடும் குளிர் என்றும் அவர்களின் அழைப்பின் பேரிலேயே நியூயோர்க்கிலிருந்து நியூஜேர்சிக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியபோதும் தன்னை வெளியேற்றிவிட்டதாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார் .நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்ட நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் அமைக்கப்பட்டமை தொடர்பாக இந்திய ஊடகங்களில் விசேடமாக ஜூனியர் விகடன் போன்ற சஞ்சிகைகளில் பிரகாஷ் சுவாமி எழுதியிருந்தார்.

ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் பணியாற்றியவர் பிரகாஷ் எம் சுவாமி. தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் இவர் ஐ நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் சென்று செய்தி சேகரிக்க அங்கீகாரம் பெற்றுள்ளார்.

நியூஜெர்சி நகரில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் இலங்கைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பும் இணைந்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதற்காக பிரகாஷ் சுவாமிக்கும் முறையான அழைப்பு அனுப்பியிருந்தன.

எனவே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அவர் நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சி சென்றார்.

அரங்கத்தில் நுழைந்த அவரைச் சிலர் தடுத்து நிறுத்தி, "உங்களை யார் இங்கே அழைத்தது, நீங்கள் இந்திய, இலங்கை அரசுகளின் சார்பில் உளவு பார்க்க வந்த ஏஜென்ட், நீங்கள் இங்கே வர வேண்டாம்'' என்று கூறி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

'நீங்கள் தந்த அழைப்பின்பேரில்தான் வந்தேன்' என்று கூறி, அழைப்பிதழையும் அடையாள அட்டையையும் அவர் காட்டிய பிறகும் கூட அவரை வெளியேறுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார்களாம்.

கூட்டத்திலிருந்து வெளியேறிய அவர் நியூயார்க்கில் பிற நிருபர்களிடம் இதை தொரிவித்து முறையிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகார அட்டை பெற்றுள்ள என்னை, செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்தது தவறு; அழைப்பு அனுப்பிவிட்டு பிறகு வெளியேறுமாறு கூறி அவமானப்படுத்தினார்கள்; என் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்தினார்கள்.நியூஜெர்சி மாகாண கவர்னரிடமும் மனித உரிமைகள் அமைப்பிடமும் இது குறித்து நிச்சயம் புகார் செய்வேன் என்றார் பிரகாஷ் சுவாமி.

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் உள்ளிட்ட இலங்கை தமிழ் தலைவர்களை பேட்டியெடுத்து வெளியிட்டவர் பிரகாஷ் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதியால் கவுரவிக்கப்பட்டார் பிரகாஷ் எம் சுவாமி. இதனைத் தொடர்ந்தே அவருக்கு புலிகளிடம் இந்த 'மரியாதை' கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதே செம்மொழி மாநாட்டில்தான் ஈழ இலக்கியவாதிகள் சிவத்தம்பி, ஜெயராஜ் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்; முதல்வர் கருணாநிதியால் கவுரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல