புதன், 24 மார்ச், 2010

மண்டையோட்டில் 10 அங்குல ஆழத்திற்கு கத்தி பாய்ந்த நிலையில் உயிர் பிழைத்த சிறுவன்

10 அங்குல கத்தியின் பாகம் மண்டையோட்டில் ஊடுருவிய நிலையில் 16 வயது சிறுவன் ஒருவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்திலுள்ள மிஷாஸி நகரைச் சேர்ந்த ஸியாவோ வெயி (Xiao Wei) என்ற மேற்படி சிறுவன், தனது நண்பர்களுடன் இணையத்தள நிலையமொன்றில் கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு ஆளானான். இந்நிலையில் மண்டை யோட்டில் ஊடுருவிய கத்தியை வெளியே எடுக்க, ஜிலின் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிறுவன் நடந்து சென்றுள்ளான்.

இது தொடர்பில் மேற்படி மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஜான் ஷிஜுன் விபரிக்கையில், "சிறுவனது முகம் முழுவதும் இரத்தமாக இருந்தது. எனினும் அவன் சுயநினைவுடன் இருந்தது எமக்கு வியப்பை ஏற்படுத்தியது'' என்று கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல