புதன், 24 மார்ச், 2010

40 ஆயிரம் ரூபாவுக்கு மனைவியை விற்ற கணவனை தேடி பொலிஸார் வலைவிரிப்பு

தன் மனைவியை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்ட கணவனைப் பீகார் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

பீகார் மாநிலம், அவுரங்காபாத் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இர்பான் மியான். இவர் மனைவி ரெகானா. ரெகானாவுக்கு மும்பையில் ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் அந்த வேலையில் சேர்ந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் கூறி இர்பான், ரெகானாவை மும்பைக்கு அழைத்து வந்தார். அங்கு ஒரு புதிய நபர் வீட்டில் ரெகானாவை விட்டு விட்டு சில மணி நேரங்களில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.

ஆனால், வெகுநேரமாகியும் இர்பான் வரவில்லை. அந்த வீட்டுக்காரர், ரெகானாவை, இர்பான் தன்னிடம் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகக் கூறியுள் ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரெகானா, அவுரங்காபாத்திலுள்ள தன் உறவினர்களுக்கு இந்தத் தகவலைத் தெரியப்படுத்தினார்.

அவர்கள் உடனே மும்பை வந்து ரெகானாவை மீட்டனர். இதுகுமீட்டனர். இதுகுறித்து, அவுரங்காபாத் பொலிஸாரிடம் புகார் அளித்தனர். இர்பான், ஜார்க்கண்ட்டிலுள்ள தன்பாத் என்ற இடத்தில் தனது இரண்டாவது மனைவியுடன் இருக்கக் கூடும் என்று தகவல் வந்ததால், இர்பானைத் தேடி பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல