புதன், 24 மார்ச், 2010

ஹிட்லரால் எழுதப்பட்ட அரிய கடிதம் 8000 பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்குமிடையேயான உண்மையான ஆழமான நட்புறவுக்கு வாழ்த்து தெரிவித்து ஹிட்லரால் எழுதப்பட்ட கடிதமொன்று ஏல விற்பனையில் 8000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலைபோயுள்ளது.

பிரித்தானியா எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி குறித்து கட்டுரை யொன்றை எழுதுமாறு பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மேற்படி கடிதத்தை ஹிட்லர் எழுதியிருந்தார்.

அமெரிக்கா மஸா ஸுஸெட்ஸ் மாநிலத்திலுள்ள இரண்டாம் உலகப் போர் அருங்காட்சியகத்தின் உரிமையாள ரான கென்னத் றெண்டல் இக்கடிதத்தை ஏல விற்ப னையில் வாங்கியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் ஆரம்ப உரிமையாளரான ஊடகவிய லாளர் டெல்மர் தனது காலத்தில் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியவராவார். அவர் ஹிட்லரை பேட்டி கண்ட முதலாவது பிரித்தானிய ஊடகவியலாளர் என்பதுடன், 1932 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஹிட்லருடன் அவரது விமானத்தில் பயணம் செய்தவராவார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல