புதன், 24 மார்ச், 2010

4 மைல் தூரம் காரை ஓட்டி சென்ற 5 வயது சிறுவன்

தனது தாயின் காரை மணிக்கு 10 மைல் வேகத்தில் 4 மைல் தூரத்திற்கு 5 வயது சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.


Damged car

மேற்கு சஸக்ஸ் நகரிலுள்ள தாங்மியரைச் சேர்ந்த தோமஸ் சட்பியல்ட் (Thomas Chatfield) என்ற மேற்படி சிறுவன், தனது தாயாரான ஜெஸிக்கா (Jessica Chatfield) உறங்கிக் கொண்டிருந்த வேளை அவரது கைப்பையிலிருந்த கார்ச் சாவியை எடுத்து கார்க் கதவைத் திறந்து உள்ளே ஏறியுள்ளான்.

தனது தாய் எவ்வாறு கார் செலுத்துவார் என்பதை திறம்பட ஞாபகப்படுத்தி தோமஸ் சட்பியல்ட், வாகன நெரிசல் மிக்க வீதிகளில் காரை செலுத்திச் சென்றுள்ளான்.

இந்நிலையில், சிறுவன் ஒருவன் “மிட் ஸுபிஷி' காரைச் செலுத்திச் செல்வதைக் கண்ட பாதசாரிகள் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் காரில் சென்ற சிறுவனை துரத்திச் சென்று அவனைத் தடுத்து நிறுத்த பெரும் பிரயத்தனம் மேற் கொண்டனர்.

சிறுவனது கார், செல்லும் வழியில் நிறுத் தப்பட்டிருந்த இரு கார்கள் மீது மோதியதுடன் மோட்டார் வாகனச் சாரதியொருவரை இடித்து விட்டு சென்றுள்ளது.

இறுதியில் அக்கார் மதில் ஒன்றில் மோதி நின்றதையடுத்து பின் தொடர்ந்து வந்த பொலிஸார் சிறுவனை மீட்டனர்.

மிகவும் வளைவான வீதிகளில் சின்னஞ் சிறு சிறுவன் லாவகமாக காரை ஓட்டிச் சென்றமை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பிரதேசவாசிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல