குஜராத்தைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது விவாகரத்து பெற்ற தாயும் தகப்பனும் மறுமணம் செய்து கொண்டதை யடுத்து ஆதரவற்றிருந்த மேற்படி சிறுமி, 9 மாத வயதாக இருந்த போதே மும்பையில் உள்ள அவரது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார்.
இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சித்தியின் மகனாலும், அயல் வீடுகளில் வசிக்கும் ஆண்களாலும் இந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
முதலில் சிறுமியிடம் முறைகேடான முறையில் நடந்து கொண்டது அவளது சகோதரனேயாவார். ஆனால் நாளடைவில் இந்த விடயம் கசிய ஆரம்பித்ததையடுத்து பலரால் சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே 71 வயது முதியவரொருவரும் சிறுமி =யிடம் தவறாக நடந்து கொண் =டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமைகள் குறித்து அறிந்திருக்காத சித்தி மேற்படி விடயத்தை அறிந்ததும் பதறிப் போனார். பின்னர் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமி மீட்கப்பட்டதுடன், அவரை துன்புறுத்திய முதியவர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் குறித்த விசாரணையின் போது, சிறுமியை மிரட்டிய பலர் அவரை பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மாயமான சிறுமியின் சகோதரன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக