புதன், 24 மார்ச், 2010

நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி மனைவி துப்பாக்கிப் பிரயோகம்

தனது கணவரின் தீராத குடிப் பழக்கத்தால் சினமடைந்த மனைவி, நள்ளிரவு வேளையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவரை எழுப்பி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினம் ஹெலன் லாஸன் (Helen Lawson 61வயது) என்ற மேற்படி பெண்மணி, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தனது கணவரான ஜியோப்றியின் (Geoffrey) அருகில் வந்து அவரை அழைத்துள்ளார்.

Geoffrey

கண் விழித்த ஜியோப்றி அதிர்ச்சியடைந்து “ஓ, ஹெலன் வேண்டாம்!' என அலறியதையும் அலட்சியம் செய்து ஹெலன் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஹெலன், ““நான் எனது கணவரை சுட்டுக் கொன்று விட்டேன். ஆனால் அது ஒரு விபத்தல்ல'' என தெரிவித்துள்ளார்.

வெல்லோ பிராந்தியத்தில் வைட் கிராமத்திலுள்ள மேற்படி தம்பதியின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் ஹெலனை கைது செய்தனர்.

இதன்போது குடிபோதைக்கு அடிமையான தனது கணவருடன் வாழ்ந்த நரக வாழ்க்கைக்கு முடிவு கட்டி விட்டதாக தெரிவித்த ஹெலன், தனது திருமண மோதிரத்தை நிலத்தில் வீசி எறிந்து விட்டு அதனை குப்பையில் போடுமாறு பொலிஸாரை கோரியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல