வெள்ளி, 15 அக்டோபர், 2010

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்படவுள்ளனர்!

500 முன்னாள் புலி உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்களுடன் மீள இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக குறித்த புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் வவுனியாவில் அவர்களது பெற்றோர்கள் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா கலாச்சார மண்டபத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட உறுப்பினர்களை குடும்பங்களுடன் இணைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 4500 சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5000 புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எஞ்சியுள்ளவர்கள் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எனவும் அவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் ஏ, பி, சீ, டி, ஈ, எப் மற்றும் ஜீ ஆகிய குழுக்களாக வகையீடு செய்யப்பட்டதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் ஏ மற்றும் பி வகையீட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல